புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2021

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்குகடைகள் திறக்கும் நேரம் என்ன ? ஊரடங்கு புதிய அறிவிப்பு

www.pungudutivuswiss.com
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்குகடைகள் திறக்கும் நேரம் என்ன ? ஊரடங்கு புதிய அறிவிப்புகள்தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது . 7 முதல் 14 ஆம் தேதி காலை வரை தளர்வுகளோடு ஊரடங்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது . கோவை , நீலகிரி , திருப்பூர் , ஈரோடு , சேலம் , கரூர் , நாமக்கல் , தஞ்சாவூர் , திருவாரூர் , நாகப்பட்டினம் , மயிலாடுதுறை மாவட்டங்களில் மட்டும் தொற்று குறையாததால் , அத்தியாவசிய கடைகள் மட்டும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது . 11 மாவட்டங்களில் மகளிகை , பல சரக்கு காய்கறி கடைகள் , மீன் கடைகள் , நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 வரை செயல்படும் . மீன் சந்தைகளை திறந்த வெளியில் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் . இறைச்சி கடைகள் மொத்த விற்பனைக்கு அனுமதி வழங்கப்படுகிறது . தீபெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் . பத்திர பதிவுகள் செய்ய 50 சதவீத டோக்கன்கள் வழங்கப்படும். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைந்து வருவதால் 11 மாவட்டங்களில் அறிவித்த தளர்வுகளோடு , கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது . அரசு அலுவலங்கள் 30 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் . ஹவுஸ் கீப்பிங் பணியில் உள்ளவர்கள் இ பாஸுடன் பணிக்கு போகலாம் . மின் பணியாளர், பிளம்பர் , கம்யூட்டர் ரிப்பேர் செய்பவர் , தச்சர் ,மெக்கானிக்குகள் , ஹார்டுவேர் கடைகள் , ஸ்டேஷனரி கடைகள் , காலை 6 மணி முதல் 5 மணி வரை இயங்க அனுமதி டேக்சி, ஆட்டோவில் இ பாஸுடன் இரண்டு பேர் பயணம் செய்யலாம் , அவரச தேவைக்கு மட்டும் கொடைக்கானல் , ஏற்காடு , ஏலகிரி , குற்றாலம் செல்ல இ பாஸுடன் பயணம் செய்யலாம் . கோவை , திருப்பூர் , சேலம் , கரூர் , ஈரோடு , நாமக்கல் , திருச்சி , மதுரையில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் , 10 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் . நடமாடும் மளிகை , காய்கறி கடைகள் வழக்கம் போல் செயல்படும் .
* மீன் சந்தைகள் மொத்த விற்பனை சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும் மேற்கண்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.
* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படலாம்.
* அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.
* சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீத டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்
* தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில்வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இபதிவுடன் அனுமதிக்கப்படும்.
* எலெக்ட்ரீசியன், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுதுநீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இ பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
* மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், சுவிட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படலாம் .
* மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடைகள் மட்டும்(விற்பனை நிலையங்கள் அல்ல), காலை 6: 00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படும் .
* ஹார்டுவேர் ( பேர் பார்ட்ஸ்) கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் .
* வாகனங்களின் உதிரிபாக விற்பனை செய்யும் கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படலாம் .
* கல்விப்புத்தகங்கள் மற்றும் எழுதுபொருள்விற்பனை செய்யும் கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* வாகன விநியோகப்பாளர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மட்டும்(விற்பனை நிலையங்கள் அல்ல) காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படலாம்.
* வாடகை வாகனங்கள், டாக்சிகள், மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ பதிவுடன் பயணிக்க அனுமதிக்கப்படும். மேலும் வாடகை டாக்சிகளில் ஓட்டுநர் தவிர 3 பயணிகளும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டுபயணிகள் மட்டும் அனுமதிக்கப்படும்.


ad

ad