புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2021

உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் இந்திய அணி தோல்வி

www.pungudutivuswiss.com
உலக கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றில் இந்திய அணி, கத்தாரிடம் தோல்வியை தழுவியது. 2022-ஆம் ஆண்டு உலகக் கோப்பை மற்றும் 2023ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றில் இந்தியா விளையாடி வருகிறது.

தொடரின் இ-பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி மீதமுள்ள கத்தார், ஓமன், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகளுடன் மோதி வருகிறது. ஏற்கனவே உலக கோப்பையில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்து விட்ட இந்திய அணி தனது 5-வது லீக் ஆட்டத்தில் ஆசிய சாம்பியனான கத்தாரை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் முதல் பாதியின் 33-வது நிமிடத்தில் கத்தார் வீரர் அப்துலாசிஸ் ஹதெம் கோல் அடித்தார். பதில் கோல் திருப்ப ஆட்டத்தின் கடைசி வரை இந்திய அணி எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணடைந்தன. இறுதியில் கத்தார் அணி 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ad

ad