புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2021

இன்று நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் - நாளை வாக்கெடுப்பு

www.pungudutivuswiss.com
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான இரு நாள் விவாதம் நாடாளுமன்றத்தில் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது.

இரண்டு நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. வாய்மூல விடைக்கான வினாக்கள் இன்றி இன்று நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும். நாளை காலை 10 மணியிலிருந்து 11 மணி வரையில் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இரு நாட்களும் விவாதிக்கப்பட்டு, நாளை மாலை 5.30 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad