புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2021

நேற்று மட்டும் 10 பேர் யாழ்ப்பாணத்தில் மரணம்

www.pungudutivuswiss.com
ழ்ப்பாணத்தில் நேற்று கொரோனா தொற்றினால் பத்து பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கைகள் ஊடாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் மாவட்டச் செயலகம் ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள நாளாந்த அறிக்கையில் எண்மர் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.


யாழ்ப்பாணத்தில் நேற்று கொரோனா தொற்றினால் பத்து பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கைகள் ஊடாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் மாவட்டச் செயலகம் ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள நாளாந்த அறிக்கையில் எண்மர் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

அதன் அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் 02 பேர், நல்லூரில் 02 பேர், சண்டிலிப்பாயில் ஒருவர், உடுவிலில் ஒருவர், தெல்லிப்பழையில் ஒருவர், கோப்பாயில் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிரிழந்த பெண் ஒருவருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று காலை தென்மராட்சியின் மட்டுவில் பகுதியில் உயிரிழந்த 65 வயதுப் பெண்ணுக்கும் அன்டிஜன் பரிசோதனை ஊடாக கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனால் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்ததாக அறிக்கையிடப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாகும்.

ad

ad