வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக நேற்று 16 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 16 பேர் கோவிட் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

நாள் ஒன்றில் வடக்கில் உள்ள மாவட்டம் ஒன்றில் பதிவாகிய அதிக பட்ச கோவிட் மரணங்கள் இதுவாகும். இந்நிலையில் மரணித்த 16 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப்பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை,வவுனியாவில் மேலும் 178 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்