தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசாங்கத்தை அறிவித்துள்ளது. அவர்கள் தங்களுடைய நாட்டை (ஆப்கானிஸ்தானை) இஸ்லாமிய எமிரேட் என்று அறிவித்துள்ளனர்.
புதிய அரசாங்கத்திலர் பிரதமராக முகமது ஹசன் முகுந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைப் பிரதமர்களாக அப்துல் கனி ஃபராதர் மற்றும் மால்வி அத்துல் சலாம் கனாபி நியமிக்கப்பட்டுள்ளனர்.
உள்துறை அமைச்சராக சிராஜுதீன் ஹக்கானி, பாதுகாப்பு அமைச்சராக முல்லா ஒமரின் மகன் முல்லா முகமது யாகூப், நிதியமைச்சராக ஹெதாயத்துல்லா பத்ரி, வெளியுறவு அமைச்சராக மால்வி அமீர் கான் முற்றாகி, நீதியமைச்சராக அப்துல் ஹக்கீம் இசாக்சை மற்றும் தகவல் தொடர்பு ஹைருல்லா சைட் வாலி ஹைர்க்வா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமராக அறிவிக்கப்பட்ட முல்லா முகமது ஹசன் அகுந்த் ஐக்கிய நாடுகள் சபையின் கறுப்புப் பட்டியலில் உள்ளார்.
உள்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள சிராஜூதின் ஹக்கானி, அமெரிக்காவின் எப்.பி.ஐ புலனாய்வு அமைப்பால் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
புதிய அமைச்சரவை முற்றிலும் ஆண்களாலும் மூத்த தலிபான் பிரமுகர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் கடந்த இரண்டு தசாப்தங்களாக அமெரிக்கப் படைகள் மீதான தாக்குதல்களை நடத்தியவர்கள்.