புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 செப்., 2021

வெறும் 48 மணி நேரம்..’ என்னவாகும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் எதிர்காலம் ?

www.pungudutivuswiss.com
கனடாவில் நாளை மறுநாள் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போது வரை வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள் எதுவும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சாதகமாக இல்லை என அதிர்வு இணையம் அறிகிறது. கனடாவில் வழக்கமாக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2019 நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனால் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் பிரதமராக தொடர்ந்தார்.


இருப்பினும், பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியை நடத்துவது என்பது கத்தி மீது நடப்பது போல தான் என்பது ஜஸ்டின் ட்ரூடோவுக்கு தெரியும். அதேநேரம் முன்பு இருந்ததை போல ஜஸ்டின் ட்ரூடோவுக்கு முழு மக்கள் செல்வாக்கு இல்லை. எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாமல் போனதாலும், சில ஊழல் புகார்களும் அவரது இமேஜை நிறைய டேமெஜ் செய்து விட்டது. இதனால் தான் அவரால் தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்கவில்லை. அதேநேரம் உலகையே புரட்டிப் போட்டு கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நல்ல பெயரையே பெற்றுத் தந்துள்ளது. கடந்த 1.5 ஆண்டுகளாகக் கனடாவில் 15 லட்சம் பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல 27 ஆயிரம் பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். எனவே இதை அப்படியே வாக்குகளாக மாற்ற வேண்டும் என்பதே ஜஸ்டின் ட்ரூடோவின் எண்ணம். இதனால் தான் முன்கூட்டியே தேர்தலை எதிர்கொள்ள அவர் தயாரானார். அதன்படி கனடா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, செப். 20ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் லிபரல் கட்சி சார்பில் ஜஸ்டின் ட்ரூடோ, கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் எரின் ஓ டூல் களமிறங்குகின்றனர். சர்வதேச அளவில் பிரபலமான தலைவர்களில் ஒருவராக அறியப்படும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இந்த முறை நிலைமை சாதகமாக இல்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார். இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகள் இருவருக்கும் கடும் போட்டி இருப்பதையே காட்டுகிறது. அதேநேரம் ஜஸ்டின் ட்ரூடோ ஆளும்கட்சி என்பதால் அரசுக்கு எதிராக இயல்பாகவே இருக்கும் மனநிலையும் அவருக்குச் சற்று பின்னடைவைத் தரலாம்.

எனவே, வாக்குப்பதிவு எப்படிச் செல்கிறது என்பதைப் பொறுத்தே தேர்தல் முடிவுகள் அமையும். பொதுவாகவே தேர்தலில் அதிகப்படியான மக்கள் வாக்களிக்கின்றனர் என்றால், மக்களுக்கு அரசின் மீதான எதிர்ப்பு மனநிலை அதிகமாக உள்ளது என அர்த்தம். எனவே, திங்கள்கிழமை வாக்குப்பதிவு அதிகமாக இருந்தால், மறுநாள் பல அதிர்ச்சிகள் ஆளும் கட்சிக்குக் காத்திருக்கும் என்றே அந்நாட்டின் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த கால தேர்தல்களைக் காட்டிலும் இந்தத் தேர்தல் போட்டி நிறைந்த ஒன்றாகவே உள்ளது. குறிப்பாக, புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங்கும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சிக்கலைத் தருகிறார். ஜக்மீத் சிங்கால் தேர்தலில் வெல்ல முடியாது என்றாலும்கூட, லிபரல் கட்சியின் வாக்கு வங்கியாகக் கருதப்படும் இளைஞர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனை கொண்டவர்களின் வாக்குகளை ஜக்மீத் சிங்கி கணிசமாகப் பிரிப்பார். இதுவும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு புதியதொரு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு தேர்தலாகவே இது உள்ளது. ஏனென்றால், முன்பு போல லிபரல் கட்சியில் அவர் தன்னிகரற்ற தலைவராக ஒன்றும் இப்போது இல்லை. அவருக்கு எதிராக லிபரல் கட்சியிலேயே பலர் உள்ளனர். இந்தத் தேர்தலில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கும் ஜஸ்டின் ட்ரூடோ நினைத்தது நடக்குமா என்பதை இன்னும் சில நாட்கள் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.


ad

ad