புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2021

வடக்கு ஆளுநர் அலுவலகம் முன் நாளை போராட்டம்

www.pungudutivuswiss.com


விவசாயிகள், கால்நடை வளர்ப்போர்  வடமாகாண ஆளுநர் அலுவலக முன்றலில், நாளை மாபெரும் கண்டப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வடமாகாண ஆளுநர் அலுவலக முன்றலில், நாளை மாபெரும் கண்டப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளன

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட இணைப்பாளர் பிரபாகரன் கருத்து தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பெரும் இடர்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் எனவும் அரசாங்கத்தால் உர இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதோடு கால்நடைகளுக்கான தீவனம் பெறுவதில் இடர்பாடு காணப்படுவதனால், விவசாயிகள் கால்நடை வளர்ப்போர், பண்ணையாளர்கள் பெரும் இடரை எதிர்நோக்கி வருகின்றார்கள் எனவும் கூறினார்.

இந்நிலையில், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நீதி கோரி, நாளை செவ்வாய்க்கிழமை, வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால், கண்டன போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

‘வலிகாமம் வடக்கு பகுதியில் நல்லாட்சி அரசாங்கத்தின் போது தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் முதல் கட்ட நிதி மட்டுமேபயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலதிகமான நிதி வசதிகள் இன்று வரை மக்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே, ஆனால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றிணைந்து, கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அத்துடன், யாழ். மாவட்டச் செயலாளர், தேசிய வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் ஆகியோரிடம் மகஜரும் கையளிக்கவுள்ளனர்' எனவும், அவர் கூறினார்.

ad

ad