புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2021

யாழ்ப்பாணத்தில் வெள்ளத்தினால் 250 பேர் பாதிப்பு! - வான்பாயும் நிலையில் கனகாம்பிகை குளம்.

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாண மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை தாக்கத்தினால் 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என் சூரிய ராஜ் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை தாக்கத்தினால் 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என் சூரிய ராஜ் தெரிவித்தார்

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் நிலையில் மழையுடன் கூடிய காலநிலையில் தாக்கத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊற்காவற்துறை, தெல்லிப்பழை, சங்கானை சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அனர்த்தப் பாதிக்கப்புக்கள் தொடர்பான விவரங்கள் அந்தந்த பிரதேச செயலகங்கள் ஊடாக பெறப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை வடக்கில் தொடரும் மழையினால் கிளிநொச்சியின் கனாம்பிகைக்குளம் வான்பாய்வற்கான சாத்தியம் காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது. இதனால் கனகாம்பிகைக்குளத்தின் நீர் வெளியேறும் தாழ் நிலப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ad

ad