புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 டிச., 2021

அரசியல் உள்நோக்கத்துடன் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

www.pungudutivuswiss.com


நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் அரசியல் உள்நோக்கம் காணப்படுவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் அரசியல் உள்நோக்கம் காணப்படுவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன

குறித்த குழுக்களில் இருந்து பேராசிரியர் சரித ஹேரத், பேராசிரியர் திஸ்ஸ விதாரண உள்ளிட்டவர்களை நீக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடும் ஆளும் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்களை இந்த குழுக்களில் நியமிக்க கூடாது என அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் அடிப்படையில் முற்றாக பொதுஜன பெரமுன உறுப்பினர்களை மாத்திரம் குறித்த தெரிவுக் குழுக்களில் நியமிக்க அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேநேரம் முறையான சமர்ப்பிப்புகள் இன்றி ஜனாதிபதியால் திடீரென நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டமை தவறானது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார்.

குறிப்பாக அரசாங்கத்தின் பல முறைகேடுகள் தொடர்பாக கோப் குழுவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஊழல் மோசடிகள் அம்பலப்படுத்தப்படுவதை தடுக்கவே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

   
   

ad

ad