புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 டிச., 2021

வனவளத் திணைக்களத்தின் காணி அளவீடு தடுத்து நிறுத்தப்பட்டது!

www.pungudutivuswiss.com


மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தலைமன்னார் மேற்கு பகுதியில், நேற்று காலை, வன வளத் திணைக்களத்தினரின் காணி அளவிடும் நடவடிக்கைகளுக்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தலைமன்னார் மேற்கு பகுதியில், நேற்று காலை, வன வளத் திணைக்களத்தினரின் காணி அளவிடும் நடவடிக்கைகளுக்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்

தலைமன்னார் மேற்குப் பகுதியில் வனவளத் திணைக்களத்தினரின் காணி அளவிடும் நடவடிக்கை நேற்றுக் காலை இடம்பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது, குறித்த பகுதிக்கு வனவளத் திணைக்களத்தினர் காணிகளை அளவிடுவதற்காக சென்றிருந்தனர்.

இதன்போது அங்கு ஒன்றுகூடிய குறித்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள், கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். குறிப்பாக, காணி அளவிடும் பணிகளை கைவிட்டு அங்கிருந்து செல்ல வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து, வன வளத் திணைக்களத்தினருக்கும் தலைமன்னார் பங்குத்தந்தை அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து, வன வளத்திணைக்களத்தினர் காணி அளவீட்டு பணிகளை கைவிட்டு அங்கிருந்து சென்றுள்ளதாக, அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்தார்.

ad

ad