புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2022

இழுவைப்படகுகளிடம் 5 ஆயிரம் ரூபா கப்பம்! - மறுக்கிறார் டக்ளஸ்

www.pungudutivuswiss.com


உள்ளூர் மீன இழுவைப் படகுகளில் இருந்து 5 ஆயிரம் ரூபாயை தான் பெறுவதாக பாராளுமன்றத்தில் எம்.ஏ.சுமந்திரன் கூறிய கருத்தை அவர் நிரூபிக்க வேண்டும் என, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்தார்.

உள்ளூர் மீன இழுவைப் படகுகளில் இருந்து 5 ஆயிரம் ரூபாயை தான் பெறுவதாக பாராளுமன்றத்தில் எம்.ஏ.சுமந்திரன் கூறிய கருத்தை அவர் நிரூபிக்க வேண்டும் என, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்தா

பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

உயிரிழந்த வடமராட்சி மீனவர்கள் இருவருக்கும் சபையில் இதன்போது அவர் அஞ்சலி செலுத்தியதுடன், இதுபோன்ற இழப்பு இனியும் நடக்கக்கூடாது எனவும் எல்லை தாண்டி வரும் இந்திய இழுவை வலை படகுகளின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்துவோம் எனவும் தெரிவித்தார்.

நாட்டின் கடல் வளங்கள் நாட்டு மக்களுக்கு சொந்தம். இந்திய மீனவர்களின் எல்லைதாண்டும் அத்துமீறல்கள் நீண்டகாலமாக இருக்கிறது. கடற்றொழில் அமைச்சை ஏற்பதற்கு முன்னரும் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை சரிவர கையாண்டுள்ளேன் என குறிப்பிட்டார்.

மீனவர் பிரச்சினையில் இரு நாடுகள் தொடர்பு படுவதால் இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தகைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. உள்ளூர் மீனவர்களின் இழுவைப் படகுளில் இருந்து 5 ஆயிரம் ரூபாயை கடற்றொழில் அமைச்சர் பெற்றுக்கொள்வதறாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அப்பட்டமான பொய் ஒன்றை கூறியிருந்தார் என்றார்.

இதில் உண்மை இருப்பதாக அவர் கூறினால் நீதிமன்றத்தின் ஊடாக அதனை அவர் நிரூபித்திருக்கலாம்.

பாராளுமன்றத்துக்கு வௌியில் சுமந்திரன் இதனை கூறியிருந்தால் சட்டநடவடிக்கை எடுத்திருப்பேன் என்பது சுமந்திரனுக்கு தெரியும். சுமந்திரன் குறிப்பிட்ட குற்றச்சாட்டை அவர் நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ad

ad