புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2022

லண்டனில் எல்லா கட்டுப்பாடுகளும் நிக்கம் ? உலகில் முதல் நாடாக பிரிட்டன் இருக்குமாம் ?

www.pungudutivuswiss.com
முழு பிரித்தானியாவிலும் தற்போது அமுலில் உள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள இருப்பதாக பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். அதற்கான நாளை அவர் விரைவில் அறிவிக்கவும் உள்ளார். இனி வைத்திய சாலைகளில் கூட முக கவசம் அணியவேண்டிய அவசியம் இல்லை, பள்ளிக் கூடத்தில் முக கவசம் அணிய வேண்டும் என்று லோக்கல் கவுன்சிலால் சொல்ல முடியாது. பெரும் கூட்டங்களில் கோவிட் பாஸ் இனிக் காட்ட வேண்டிய அவசியம் சில்லை. மேலும் கோவிட் வந்தால் கட்டாயம் வீட்டில் தங்கி இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இதனால் உலகில் கட்டுப்பாடுகள் அற்ற முதல் நாடு…


பிரித்தானியா என்ற பெருமையை அன் நாடு எட்டியுள்ளது. இதனூடாக உலகில் கொரோனாவை வென்ற முதல் நாடு பிரித்தானியா என்ற அறிவிப்பு வெளியாக உள்ளது. ஆனால் தன் மீது விழுந்துள்ள பழிகளை மறைக்க இவ்வாறு ஓரு பெரும் அதிரடியான முடிவை பொறிஸ் எட்டியுள்ளதாக, விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

ad

ad