புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2022

ரஷ்ய படையெடுப்பின் 10-வது நாள்: இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள்

www.pungudutivuswiss.com
கார்ஹிவ் நகரத்தில் பல நாட்களாகத் தொடரும் ஷெல் குண்டு தாக்குதல்

யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு பத்தாவது நாளாக இன்று தொடர்கிறது. இந்நிலையில், படையெடுப்பு தொடங்கியதில் இருந்து நடந்த சில முக்கிய நிகழ்வுகள் இங்கே:

  • உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், பிப்ரவரி 24 முதல் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் யுக்ரேனில் இருந்து வெளியேறியுள்ளதாக ஐ.நா அகதிகள் நிறுவனம் கூறுகிறது.
  • டினிப்பர் நதி கருங்கடலைச் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள கெர்சன் தான் முதலில் வீழ்ந்த பெரிய நகரம்.
  • ரஷ்ய ஏவுகணைகள் தலைநகர் கீயவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்ஹிவ் ஆகியவற்றைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றன. சாலை வழியாக கீயவை நெருங்கும் ஒரு பெரிய கவச வாகனத் தொடரணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
  • மேரியோபோல் தெற்கு துறைமுகம் இன்னும் முற்றுகையின் கீழ் உள்ளது. ரஷ்ய படைகள் மற்றொரு துறைமுகமான ஒடெஸ்ஸாவை நோக்கிச் செல்கின்றன. இரண்டையும் கைப்பற்றுவது யுக்ரேனின் கடல் பரப்புடனான தொடர்பைத் துண்டித்துவிடும்.
  • வெள்ளிக் கிழமையன்று பல மணிநேரம் ஷெல் குண்டு தாக்குதல் நடத்திய பின்னர், ஐரோப்பாவின் மிகப்பெரிய ஸாப்போரீஷியா அணுமின் நிலையத்தையும் ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன. இந்த நடவடிக்கையைப் பற்றி உலகத் தலைவர்கள், இந்தத் தாக்குதல் ஒரு பேரழிவைக் கட்டவிழ்த்துவிட்டதாகக் கவலையுடன் கூறினர்.
  • 1986-ஆம் ஆண்டு அணு உலை விபத்து நிகழ்ந்த செர்னோபில் அணுமின் நிலையும் தற்போது ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ளது.
ரஷ்யா இதுவரை கைப்பற்றிய பகுதிகள்
  • யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி, மேற்கு நாடுகள் தனது நாட்டில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கத் தொடர்ந்து மறுத்து வருவதைக் கண்டித்துள்ளார்.
  • அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், நாட்டின் மத்திய வங்கி, அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் அவரது உள்வட்டத்தைக் குறி வைத்து, ரஷ்ய சொத்துகளை முடக்குவது போன்ற தடைகளை விதித்துள்ளன. அத்தகைய கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ரூபிள் மதிப்பு சரிந்துள்ளது. இது வர்த்தகம், முதலீடுகள் மற்றும் பயணங்களை பாதித்தது.
  • யுக்ரேனில் நடக்கும் படையெடுப்பின் செய்திகளைத் தணிக்கை செய்யும் கொடூரமான சட்டத்திற்கு ரஷ்யா ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, பிபிசி உட்பட சுயாதீன ஊடகங்கள் பலவும் ரஷ்யாவில் பணிகளை நிறுத்திவிட்டன.
  • சாம்சங் முதல் ஏர் பிஎன்பி மற்றும் கார்டியர் வரை, பல நிறுவனங்கள், ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்வது மற்றும் ரஷ்யாவிலான செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளன.

ad

ad