இந்த நிலையில்தான் இவர்கள் நான்கு பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலருந்தே நீக்கப்படுவதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
சசிகலா தலைமை: அதிமுகவில் வலுக்கும் திடீர் ஆதரவு - என்ன காரணம்?
சசிகலா மீதான ஊழல் வழக்கு: ஐஜி ரூபா குற்றச்சாட்டால் என்ன நடக்கும்?
சில நாட்களுக்கு முன்பாக கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.கவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி , "ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரண்டு பேரும் வழிநடத்தியும் கட்சி வளரவில்லை. சசிகலா அல்லது தினகரன் தலைமையில் அதிமுக செயல்படவேண்டும்" என்று கூறினார்.
ஆறுகுட்டி அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராகக் கருதப்படுபவர் என்பதால் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வி.கே. சசிகலாவை மீண்டும் அ.தி.மு.கவில் இணைக்க வேண்டும் என்ற கருத்துக்கு ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவு இருக்கிறதோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியது.
இந்த நிலையில்தான் வி.கே. சசிகலாவைச் சந்தித்த ஓ. ராஜாவும் அவருடனிருந்தவர்களும் கட்சியைவிட்டு நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த நீக்கம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசிவரும் ஓ. ராஜா, தன்னை நீக்க ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஆகியோருக்கு அதிகாரம் கிடையாது என்றும் சசிகலாவின் வருகையே கட்சியைப் பலப்படுத்தும் என்றும் கூறிவருகிறார்.
ஓ. ராஜா இதற்கு முன்பாக இருமுறை கட்சியைவிட்டு நீக்கப்பட்டு, பிறகு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை காலையில் அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வுமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், தேனி மாவட்ட ஆவின் தலைவர் ஓ. ராஜா நீக்கப்படுவதாக அறிவித்திருக்கின்றனர்.
அவரோடு சேர்ந்து, தேனி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் எஸ். முருகேசன், மீனவர் பிரிவுச் செயலாளர் வைகை கருப்புஜி, கூடலூர் நகர புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் எஸ். சேதுபதி ஆகியோரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா நேற்று திருச்செந்தூர் வந்திருந்தார். அப்போது அங்கு அவரை ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பியான ஓ. ராஜாவும் முருகேசன், கருப்புஜி, எஸ் சேதுபதி ஆகியோரும் சந்தித்துப் பேசினர். இது தொடர்பான புகைப்படங்களை சசிகலா தரப்பு வெளியிட்டது.