புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2022

எல்லா தெருக்களிலும் வெடித்த ரஷ்ய டாங்கிகள்: கொரில்லா யுத்தத்தில் இறங்கியுள்ள உக்கிரைன் ராணுவம்

www.pungudutivuswiss.com
ரஷ்ய படைகள் போர் தொடுக்கும் கட்டத்தில், 2 அல்லது 3 நாட்களில் உக்கிரைன் வீழ்ந்து விடும் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் கதியது. ஆனால் உக்கிரைன் படைகள், இதுவரை நேருக்கு நேராக ரஷ்ய படைகளோடு மோதவில்லை. இதுவே உண்மை நிலை. அவர்கள் போர் ஆரம்பித்த நாள் முதல் கொண்டே கொரில்லா யுத்தத்திற்கு மாறிவிட்டார்கள். இதனால் பெரும் படையாக வந்து கொண்டு இருக்கும் ரஷ்ய படைகளை, சில இடங்களில் மட்டுமே வழி மறித்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ரஷ்ய படைகள் தாக்குதலுக்கு உள்ளாகும் நேரத்தில் மட்டும், அவர்கள் வான் படையின் உதவியை நாடுவார்கள். ரஷ்ய தளத்தில் இருந்து வான் படை புறப்பட்டு, வந்து சேர எடுக்கும் நேரம் 30 தொடக்கம் 40 நிமிடம். அவர்கள் 40 நிமிடத்தில் மட்டுப் படுத்தப்பட்ட தாக்குதலை முடித்து விட்டு அங்கிருந்து தப்பி விடுவார்கள். இதனால் எந்த நிலைக்கு அடிப்பது என்று தெரியாமல் ரஷ்ய வான் படையினர் குழம்பி உள்ளார்கள். பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளை ஒன்றாக சேர்த்தால் எந்த அளவு பரப்பு வருமோ, அந்த அளவு பெரிய நாடு தான் உக்கிரைன். இதனால் ஆட்டிலறி

ஷெல் அடிப்பது என்பது எல்லாம் சாத்தியமே கிடையாது. ஏன் என்றால் அதற்கு என்று ஒரு நிலை இல்லை. இதனால் முன்னால் உள்ள எதிரிகளை டாங்கிகள் தாக்க வேண்டும், இதனால் டாங்கிகள் வெட்ட வெளியில் நிற்கிறது. இது உக்கிரைன் வீரர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல. பிரித்தானியா கொடுத்துள்ள 5,000 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் அவர்கள் கைகளில் உள்ளது. வெறும் கைகளில் கொண்டு சென்று தாக்க வல்ல, இந்த ராக்கெட்டை அவர்கள் இலகுவாக ஏவி, ரஷ்ய டாங்கிகளை அழித்து வருகிறார்கள். உக்கிரைன் நாட்டு தளபதி ஒருவர் நேற்றைய தினம்(04) தெரிவித்த கருத்தின் அடிப்படையில், 100க்கு மேற்பட்ட டாங்கிகளை தாம் அழித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இது வரை 9,200 ரஷ்ய படைகள் காயமடைந்துள்ளதாகவும், 2,000 பேர் வரை இறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை கொரில்ல யுத்தம் என்பதனால், உக்கிரைன் படை வீரர்கள் இதுவரை 360 பேர் இறந்துள்ளதாக அறியப்படுகிறது. இதனால் கடும்…

சீற்றமடைந்துள்ள புட்டின், தனது அதி நவீன போர் விமானங்களை தற்போது களத்தில் இறக்க ஆரம்பித்துள்ளார். இருப்பினும் நாடு பெரியது என்பதனால் ரஷ்ய படை ஒரு இடத்தை ஆக்கிரமித்து விட்டு நகர்ந்து சென்றால், அவ்விடத்தை மீண்டும் உக்கிரைன் படைகள் பிடித்து வருகிறது. ஒட்டு மொத்தமாக உக்கிரைன் நாட்டை தக்க வைப்பது என்றால் ரஷ்யாவுக்கு 9 லட்சம் படை வீரர்கள் தேவை. அது சாத்தியமே இல்லை. இதனால் தான் ரஷ்யா தனது உக்தியை மாற்றி, நகரங்களை கைப்பற்றி வருகிறது. முக்கிய நகரங்களை அவர்கள் கைப்பற்றி, தம் வசம் வைத்திருக்க முனைகிறார்கள். இந்த யுத்தம் பல ஆண்டுகள் நீடிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் ரஷ்யா பெரும் தொகைப் பணத்தை இழந்து, முடங்க வாய்ப்புகள் உள்ளது.

ad

ad