புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2022

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை. புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது

www.pungudutivuswiss.com
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை - இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு 23 தீர்மானங்களை தவிர மற்ற புதிய தீர்மானங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சென்னை, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார். இதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீடு செய்தார். மேலும் இந்த வழக்கினை ஐகோர்ட்டில் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் அவர் முறையீடு செய்தார். இதையடுத்து தலைமை நீதிபதியின் அனுமதியுடன் இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் நேற்று நள்ளிரவு விசாரணைக்கு வந்தது. விடிய விடிய நடந்த மேல்முறையீடு வழக்கில் 3 தரப்பில் வாதங்கள் முடிந்த நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை. அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது. அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களில் முடிவு எடுக்கக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 23 தீர்மானங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கலாம். அதிமுக பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் குறித்து ஆலோசித்தாலும் எந்த முடிவும் எடுக்கக்கூடாது. அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இன்றைய அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ad

ad