புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2022

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் மேல் முறையீடு

www.pungudutivuswiss.comஅதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்ததை எதிர்த்து சண்முகம் தரப்பு மேல் முறையீடு செய்துள்ளது. சென்னை, அ.தி.மு.க.வில் அரங்கேறி வரும் ஒற்றை தலைமை விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு அ.தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது. இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதேபோல் இதே விவகாரம் தொடர்பாக சென்னை சிவில் கோர்ட்டில் தொடரப்பட்ட மற்றொரு மனுவும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தநிலையில், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தலைமை நீதிபதி அமர்விடம் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. மேல் முறையீட்டு மனுவை ஏற்று சற்று நேரத்தில் நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு விசாரிக்க உள்ளது. நீதிபதி துரைசாமி வீட்டில் மேல்முறையீடு விசாரணை நடைபெற உள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்ட நிலையில் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்துள்ளது.
Gefällt mir
Kommentieren
Teilen

ad

ad