புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2022

22 மீது வெள்ளியன்று வாக்கெடுப்பு!

www.pungudutivuswiss.com


அரசியலமைப்பின் எதிர்வரும் 21 ஆம் திகதி 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வாரம் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தின் போது இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

அரசியலமைப்பின் எதிர்வரும் 21 ஆம் திகதி 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வாரம் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தின் போது இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டன

இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை காலை 09.30 மணி முதல் காலை 10.30 மணிவரை வாய்மூல வினாவுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று காலை 09.30 மணிக்கு பாராளுமன்ற அமர்வு கூடவுள்ளதுடன்,காலை 10.30 மணி முதல் மாலை 05 மணிவரை கனிய வளங்கள் உற்பத்தி (விசேட விதி விதானங்கள்) (திருத்த) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

நாளை காலை 10.30 மணி முதல் மாலை 05. மணிவரை நீதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நச்சு வகைகள்,அபின் மற்றும் அவசரகால மருந்துகள்(திருத்தம்,நொத்தாரிசு (திருத்தம்),ஆவணங்களை பதிவிடலுக்கான திருத்தம்,இறுதி விருப்பு பத்திரம்,ஊழல் ஒழிப்பு (திருத்தம்)சட்டமூலம் உள்ளிட்ட சட்டமூலங்கள் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் காலை 10.30 மணி முதல் மாலை 05.மணிவரை அரசியலமைப்பின் 22ஆவது திருச்சட்ட மூலம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.அத்துடன் 21ஆம் திகதி மாலை 05 மணிக்கு 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

ad

ad