புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2022

சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளி

www.pungudutivuswiss.com
 சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்ற ஓ. பன்னீர் செல்வம் எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் எடப்பாடி பழனிசாமி அருகில் அமர்ந்தார் சென்னை, சென்னை, தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. இதனால், நேற்றைய சட்டசபை கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் யாரும் பங்கேற்கவில்லை. ஆனால் நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றார். அவர் எதிர்கட்ச்சி துனைத்தலைவர் இருக்கையில் அமந்ர்திருந்தார். இந்நிலையில், இன்று நடைபெறும் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலகத்திற்கு தற்போது வருகை தந்துள்ளனர். இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலகத்திற்கு வருகை தந்து சபாநாயகர் அப்பாவு-வை சந்தித்தனர். அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்தித்து எதிர்கட்சி துணைத்தலைவர் பதவி தொடர்பாக பேசினர். இந்நிலையில் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க ஓ. பன்னீர் செல்வம் வந்தார். அவர் எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் எடப்பாடி பழனிசாமி அருகில் அமர்ந்தார். இதனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் அவையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு அவர்கள் அவர்களிடம் உங்களுக்காக நேரம் தருகிறேன் கேள்வி நேரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள் எனக் கூறினார்.ஆனால் அதை ஏற்காத அதிமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்

ad

ad