இளைஞர்களின் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்! [Wednesday 2022-10-26 08:00] |
![]() தோட்டக் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று உடற்கூற்று பரிசோதனையின் பின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது |
அத்துடன் இருவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு உள்படுத்திய போது மது மற்றும் ஐஸ் போதைப்பொருளை பாவித்தமை கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை புலோலி சிங்கநகர் பகுதியில் தீபாவளியன்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது. பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டனர். மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி சட்ட மருத்துவ வல்லுநர் க.வாசுதேவா முன்னிலையில் இருவரது சடலமும் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. |
-
26 அக்., 2022
மது மற்றும் ஐஸ் போதைப்பொருளை பாவித்தமை-இளைஞர்களின் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்!
www.pungudutivuswiss.com