பிரித்தானிய
பிரதமர் லிஸ் டிரஸ் அமைச்சரவையிலிருந்து விலகிய இந்திய வம்சாவளியை சேர்ந்த உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன், ரிஷி சுனக் அமைச்சரவையில் மீண்டும் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பிரித்தானியாவின் முன்னாள் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த சுயெல்லா பிரேவர்மேன் திடீரென தனது பதவியை இராஜினாமா செய்தார்.
இந்திய வம்சாவளி பெண்
இந்திய வம்சாவளி பெண்ணான இவரது தந்தை கோவாவை சேர்ந்தவர். தாயார் தமிழகத்தை சேர்ந்தவர். இவர் பதவி ஏற்று 43 நாட்களே ஆன நிலையில், பிரதமர் லிஸ் டிரஸ் உடன் நடந்த சந்திப்புக்கு பின் தன் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.
அவருக்கு பதிலாக ஜெர்மி ஹன்ட் புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
உள்துறை அமைச்சர்
இந்நிலையில் பிரித்தானிய பிதமர் லிஸ் டிரஸ் தமது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து புதிய பிரதமராக இந்திய வசம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து பதவி விலகிய சுயெல்லா பிரேவர் மேன் மீண்டும் உள்துறை அமைச்சராக ரிஷி சுனக் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.