புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 டிச., 2022

இலங்கையில் கட்டுப்படுத்தக்கூடிய நிலைமை இல்லை! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

www.pungudutivuswiss.com 
பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) எச்சரித்துள்ளது.

வளிமண்டலத்தில் தூசி துகள்கள் அதிகரிப்பதன் காரணமாக காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காற்றின் ஊடாக இந்தியாவில் இருந்து இலங்கையின் வான்வெளிக்கு தூசித் துகள்கள் வருவதே இந்தப் பிரச்சினைக்கு முக்கியக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

காற்றின் தரச்சுட்டெண்

இலங்கையில் கட்டுப்படுத்தக்கூடிய நிலைமை இல்லை! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Urgent Notice To The People

அதனடிப்படையில் இன்றைய தினம் இலங்கையின் பல நகரங்களில், காற்றின் தரச்சுட்டெண் 150 – 200 வரையாக நிலவுகிறது. இதனையே ஆரோக்கியமற்ற நிலை என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லை மற்றும் கொழும்பு உட்பட பல பகுதிகளில் காற்றின் தரச்சுட்டெண் 114 ஆகவும், மன்னாரில் 117 இல் காற்றின் தரச்சுட்டெண் பதிவாகியுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் 212 ஆகவும், கம்பஹாவில் 189 ஆகவும், தம்புள்ளையில் 170 ஆகவும், கொழும்பில் 169 ஆகவும், கண்டியில் 161 ஆகவும், நீர்கொழும்பில் 170 ஆகவும், அம்பலாந்தோட்டையில் 157 ஆகவும் காற்றின் தரச்சுட்டெண் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முககவசம் அணியவும்

இதேவேளை பல்வேறு பகுதிகளில் தற்போது நிலவும் காற்று மாசு நிலை காரணமாக சுகாதாரப் பாதுகாப்பிற்காக முகக்கவசத்தை அணியுமாறு வைத்தியர் அனில் ஜாசிங்க கேட்டுக்கொண்ள்ளார்.

இலங்கையில் கட்டுப்படுத்தக்கூடிய நிலைமை இல்லை! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Urgent Notice To The People

இது தொடர்பில் வைத்தியர் தெரிவிக்கையில் “இயலுமானவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். இந்தியாவில் இருந்து வரும் காற்றால், ​​கொழும்பு, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, புத்தளம், கண்டி, வவுனியா போன்ற முக்கிய நகரங்களில் இந்த மோசமான காற்று மாசு நிலை பதிவாகியுள்ளது.

இந்த நிலைமையை இலங்கையில் கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், இதய நோயாளிகள் மற்றும் நுரையீரல் நோயாளிகள் வீட்டை விட்டு வெளியே வருவதை முடிந்தவரை கட்டுப்படுத்தினால் நல்லது.மேலும் முகக்கவசத்தை அணிவது முக்கியம்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Gallery

ad

ad