யாழ் கடல் பகுதிகளில், GPS பொருத்தப்பட்ட பல பொதிகள் மிதப்பதாக மீனவர்கள் தெரிவித்து வருகிறார்கள். தற்போது கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்தல் வேறு லெவலுக்கு சென்றுள்ளது. அது என்னவென்றால்,
ராமேஸ்வரத்தில் கஞ்சாவை அல்லது போதைப் பொருட்களை முதலில் நீர் உட்புக முடியாதவாறு பேக் செய்கிறார்கள். அத்தோடு சிறிய GPS ரக்கர் ஒன்றையும் வைத்து விடுகிறார்கள். பின்னர் அவர்கள் இலங்கை கடல் பரப்புக்கு உள்ளே வந்து, அந்தப் பொதிகளை பரிமாறத் தேவை இல்லை..ஏன் என்றால் அவர்கள் கொண்டு வரும்
பொதிகளை, கடலில் போட்டு விட்டு செல்கிறார்கள். குறித்த GPS ரக்கர் இலக்கத்தை மட்டும் கொடுக்கிறார்கள். அதனை எடுக்கவேண்டியவர் இலங்கையில் இருப்பார். அவரிடம் உள்ள சிறிய கருவியில் இந்த GPS ரக்கர், நம்பரை போட்டால் போதும். அது எங்கே மிதக்கிறது என்பதனை அது துல்லியமாக காட்டுகிறது. அன் நபர் கடல்படை நடமாட்டம் குறைந்த நேரத்தில் சென்று பொதியை எடுத்து வருகிறார். அவ்வளவு தான் மேட்டர். ரெம்ப ஈஸி …