புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 டிச., 2022

உலகில் சோமாலயாவுக்கு அடுத்த படியாக பஞ்சப்பட்ட நாடாக மாறிய இலங்கை – :அதிர்ச்சி

www.pungudutivuswiss.com

உலகில் உள்ள நாடுகளில், அன் நாட்டு அரசு கட்டவேண்டிய கடன் தொகையை பொதுமக்கள் கட்டி வருகிறார்கள் என்றால். அந்த நாட்டில் பெரும்

பண வீக்கம் இருப்பது உறுதி. பல நாடுகளில் உள்ள அரசு, தனது வருமானத்தை வைத்தே தமது செலவை பூர்த்தி செய்து விடுகிறது. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை, இலங்கையின் கடன் சுமை அனைத்தையும் அரசு மக்கள் தலையில் கட்டியுள்ளது என்று, நாம் சொல்லவில்லை ஐ.நா சபை தெரிவித்துள்ளது. அந்த வகையில்…

அது மக்கள் மீது எந்த நாடுகள் அதிக சுமையை போட்டுள்ளது என்ற பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் பார்த்தால் உலகில் 2ம் இடத்தில் இலங்கை உள்ளது. மக்கள் மீது கடுமையான வரிசை பிரயோகித்து. அதனூடாக வரும் பணத்தை எடுத்து செலவும் செய்யும் நாடு சோமாலியா. அன் நாட்டில் எந்த உற்பத்தியோ இல்லை ஏற்றுமதியோ இல்லை. அது போலவே இலங்கையும் மாறியுள்ளது. இலங்கையில் இருந்து ஏற்றுமதியூடாக கிடைக்கும் பணத்தை இதுவரை இலங்கை அரசு ஊக்குவிக்கவே இல்லை.

தேயிலை , கடல் வழம், கனிம வழம், ரப்பர், தானியம், மிளகு தொடக்கம் இலங்கையில் என்ன தான் இல்லை. அப்படி இருந்து இலங்கை ஒரு பஞ்சப்பட்ட நாடாக மாறியுள்ளது என்பது , இலங்கை அரசு சரியாக செயல்படவில்லை என்பதனையே காட்டுகிறது.

ad

ad