புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2023

இலங்கை தமிழ்பெண்ணிற்கு இந்திய கடவுசீட்டு வழங்க உத்தரவு!

www.pungudutivuswiss.com

இலங்கை தமிழ்பெண்ணிற்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கலாம் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை ராயனூர் இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்த ஹரினா என்ற இளம்பெண், மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், என் பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள்.

இலங்கை தமிழ்பெண்ணிற்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கலாம் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை ராயனூர் இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்த ஹரினா என்ற இளம்பெண், மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், என் பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள்

அவர்கள் உள்நாட்டு போர் நடைபெற்ற போது தமிழகத்துக்கு அகதிகளாக வந்தார்கள். நான் கரூர் கோடாங்கிபேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 2002-ம் ஆண்டு பிறந்தேன். பள்ளிப்படிப்பை கரூரிலும், கோவையில் கல்லூரி படிப்பையும் முடித்தேன்.

தற்போது வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடிவு செய்துள்ளேன். இதனால் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தேன். ஆனால் நான் இந்திய குடிமகள் இல்லை என்று கூறி எனது விண்ணப்பத்தை நிராகரித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவை ரத்து செய்து எனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என்றார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் பாஸ்போர்ட் சட்டப்பிரிவு 20-ல் இந்திய குடிமகனாக இல்லாதவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவது குறித்து கூறப்பட்டு உள்ளது. அதில், பொதுநலன் கருதி மத்திய அரசு நினைத்தால், இந்திய குடிமகனாக இல்லாதவர்களுக்கும் பாஸ்போர்ட் வழங்கலாம்.

மனுதாரர் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்து உள்ளார். எனவே மனுதாரருக்கு பாஸ்போர்ட் சட்டம் 1967 பிரிவு 20-ன் கீழ் பாஸ்போர்ட் வழங்க வேண்டும். மனுதாரர் மீண்டும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவரது விண்ணப்பத்தை மத்திய உள்துறை செயலாளர் பரிசீலித்து உத்தரவளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ad

ad