புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஏப்., 2023

பயணிகள் படகு சேவைக்குத் தயாராகும் காங்கேசன்துறை துறைமுகம்!

www.pungudutivuswiss.com


இலங்கை - இந்தியாவுக்கு இடையில் பயணிகள் படகு போக்குவரத்து சேவைக்காக கடற்படையினரின் பங்களிப்புடன் காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை - இந்தியாவுக்கு இடையில் பயணிகள் படகு போக்குவரத்து சேவைக்காக கடற்படையினரின் பங்களிப்புடன் காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இலங்கை -இந்தியாவுக்கிடையில் , காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து பாண்டிச்சேரி வரை பயணிகள் படகுச் சேவையை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தினை நிறைவு செய்வதற்காக காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை துரிதமாக விரிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு சொந்தமான கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், கடல் வழியூடாக முன்னெடுக்கப்படும் பொருளாதார நடவடிக்கைகளை பாதுகாப்பான முறையில் முன்னெடுப்பதற்கு நிலையான கடல் வலயத்தை உருவாக்குவதற்கும், அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு திறமையாகவும், திறம்படவும் களமிறங்குவதற்கும் கடற்படை தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.

அதற்கமைய, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சினால் கடற்படையிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கமைய, காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை மூலம் இடம்பெறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் குடிவரவு, குடியகல்வு செயற்பாடுகள், சுங்க அனுமதிக்கு தேவையான பயணிகள் முனையத்தை நிர்மாணித்தல் என்பன கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும். இதற்கு தேவையான மூலப்பொருட்கள் இலங்கை துறைமுக அதிகார சபையால் வழங்கப்பட்டதாக கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடற்படையின் பங்களிப்பின் மூலம் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்பு ரீதியான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் கடற்படை அதன் முழுமையான பங்களிப்பை வழங்கும் என்று கடற்படை தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

ad

ad