புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஏப்., 2023

ஓபிஎஸ் மேல் முறையீடு; இடைக்கால உத்தரவு எதுவும் இல்லை: 20, 21-ம் தேதி இறுதி விசாரணை- சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

www.pungudutivuswiss.com
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் 20, 21-ம் தேதிகளில் இறுதி விசாரணை நடத்தப்படும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்று ஜேசிடி.பிரபாகர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனஅதிமுக சார்பில் ஏப்ரல் 16-ம் தேதி செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென ஓபிஎஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகி முறையிட்டார். Also Read - உரிமம் இன்றி கழிவுநீர் வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை - நகராட்சி ஆணையர் எச்சரிக்கை அதன்படி அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பினரும் வாதங்களை முன்வைத்தனர். Also Read - தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகை: சென்னையில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் இயக்கம் - போக்குவரத்துத்துறை தகவல் இரு தரப்ப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கில் திட்டமிட்டபடி ஏப்ரல் 20, 21-ஆம் தேதிகளில் இறுதி விசாரணை நடத்தப்படும் என்றும் வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் இல்லை எனவும் தேவைப்பட்டால் ஏப்.24-ந் தேதியும் இறுதி விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். Also Read - வண்டலூரில் தொழிற்சாலையில் இரும்பு கேட் விழுந்து காவலாளி சாவு தற்போது உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்த வேண்டாம் எந்த முடிவு எடுத்தாலும் அது மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ad

ad