புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஏப்., 2023

1 இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு அனுப்புகிறது அரசாங்கம்!

www.pungudutivuswiss.com

இலங்கையின் டோக் குரங்குகளை சீனாவிலுள்ள விலங்கியல் பூங்காக்களுக்கு வழங்குமாறு சீனப் பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
1 இலட்சம் டோக் குரங்குகளை முதற்கட்டமாக வழங்கும் மானியக் கோரிக்கை தொடர்பான விசேட கலந்துரையாடல் விவசாய அமைச்சில் இடம்பெற்றது.

இலங்கையின் டோக் குரங்குகளை சீனாவிலுள்ள விலங்கியல் பூங்காக்களுக்கு வழங்குமாறு சீனப் பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளது. 1 இலட்சம் டோக் குரங்குகளை முதற்கட்டமாக வழங்கும் மானியக் கோரிக்கை தொடர்பான விசேட கலந்துரையாடல் விவசாய அமைச்சில் இடம்பெற்றது


இலங்கை டோக் குரங்குகளை வெளிநாட்டுக்கு வழங்குவது தொடர்பான சட்ட நிலைமைகளை ஆராய்வதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இந்த குழுவில் அமைச்சு, விலங்கியல் திணைக்களம், வனவிலங்கு திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளையும் உள்ளடக்கியிருக்க வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், இந்தக் குழுவை உடனடியாக நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட உள்ளது.

ad

ad