புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 செப்., 2023

10 மாதங்களில் வெளிவிவகார அமைச்சுக்கு 5 கடிதங்கள்!- ஒன்றுக்கும் பதில் இல்லை.

www.pungudutivuswiss.com


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சாந்தனின் தாயார் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வருகிறார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சாந்தனின் தாயார் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வருகிறார்

பிரதமர் கொலை வழக்கில் கைதாகி 32 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த ஆண்டு இந்திய மத்திய அரசினால் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலையின் பின்னர் இலங்கைக்கு மீள செல்வதற்கான உரிய ஒழுங்குகள் மேற்கொள்ள வேண்டும் என கூறி கடந்த 10 மாத கால பகுதிக்கு மேலாக திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்திய அரசாங்கத்தால் விடுதலை செய்யப்பட்ட எனது மகனை மீள இலங்கைக்கு அழைத்து வந்து தன்னிடம் ஒப்படைக்குமாறு சாந்தனின் தாயார் கடந்த 10 மாத கால பகுதியாக பல்வேறு தரப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்து வருகின்றார்.

கடந்த மாதம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் ஊடாக வெளிவிவகார அமைச்சுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்த கடிதத்திற்கு இது வரையில் வெளிவிவகார அமைச்சிடம் இருந்து பதில் வரவில்லை எனவும் , 10 மாத காலப்பகுதிக்குள் 5 கடிதங்களை வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பியும் பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ad

ad