புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 செப்., 2023

தியாக தீபம் நினைவேந்தலை குழப்ப முயன்ற பொலிஸ்

www.pungudutivuswiss.com


தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டு இருந்தமையால், அவ்வீதி ஊடான போக்குவரத்தினை மாற்று வீதி வழியாக மாற்றி போக்குவரத்து ஒழுங்குகளை செய்தவர்களை பொலிஸார் மிரட்டி அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் இடத்தின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ள வாகனங்களை அனுமதித்தனர்.

தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டு இருந்தமையால், அவ்வீதி ஊடான போக்குவரத்தினை மாற்று வீதி வழியாக மாற்றி போக்குவரத்து ஒழுங்குகளை செய்தவர்களை பொலிஸார் மிரட்டி அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் இடத்தின் ஊடாக போ

அத்துடன் தாமும் பொலிஸ் வாகனத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் பகுதியில் சுற்றி திரிந்து நிகழ்வுகளில் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்ததுடன் , மக்கள் நெரிசல் காணப்பட்ட இடத்தினால் வாகனத்தை செலுத்தி மக்கள் மத்தியில் பயத்தினை ஏற்படுத்த முயன்றனர்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வின் இறுதி நாளான இன்று யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் நல்லூர் ஆலயத்திற்கு அருகில் உள்ள திலீபனின் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது. கொட்டும் மழைக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் நினைவிடத்தில் கூடி அஞ்சலி செலுத்தினர்.

அதனால் நினைவிடத்தை அண்மித்த வீதியில் பெருமளவான மக்கள் காணப்பட்டமையால் , குறித்த வீதி ஊடாக வந்த வாகனங்களை மாற்று வீதியூடாக செல்ல அங்கிருந்த சிலர் வழி வகுத்தனர்.

அவ்வேளை அங்கு வந்த பொலிஸார் போக்குவரத்தை மக்கள் குவிந்துள்ள வீதி ஊடாகவே மேற்கொள்ளுமாறு வாகன சாரதிகளுக்கு பணித்ததுடன் , அங்கிருந்து போக்குவரத்து ஒழுங்குகளை செய்த இளைஞர்களையும் அவ்விடத்தில் இருந்து அச்சுறுத்தி அகற்றி இருந்தனர்.

இருந்த போதிலும் பெரும்பாலான சாரதிகள் தாங்களாகவே அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் வீதியை தவிர்த்து மாற்று வீதி வழியாக தமது பயணத்தை மேற்கொண்டனர்.

ad

ad