புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 செப்., 2023

ஒக்டோபர் முதல் வாரத்தில் நாகப்பட்டினம்- காங்கேசன்துறை அதிவேக பயணிகள் படகு சேவை! [Tuesday 2023-09-26 06:00]

www.pungudutivuswiss.com


2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் வாரத்தில் இருந்து  நாகப்பட்டினத்திலிருந்து  காங்கேசன்துறைக்கு அதிவேக பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் வாரத்தில் இருந்து நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு அதிவேக பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது

இந்த அதிவேக படகு சேவையானது 60 கடல் மைல் தூரத்தை கடந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து செயற்படத் தொடங்கும் என்று இந்திய கப்பல் போக்குவரத்து கழக வட்டாரங்கள் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு கடல்சார் சபை மற்றும் மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் இணைந்து இத்திட்டத்தை செயற்படுத்த உள்ளன.

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஒஃப் இந்தியாவினால் இந்த அதிவேக பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், துறைமுக கால்வாய் தோண்டப்பட்டு வருவதாக மாநில கடல்சார் சபை தகவல்கள் தெரிவித்ததாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் பயணிகள் முனையம் விரைவில் அமைக்கப்படும் என்றும் இந்தச் சேவை இலங்கையர்களின் சுகாதாரம், கல்வி மற்றும் சுற்றுலாத்துறைக்கு நன்மை பயக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது

ad

ad