புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 செப்., 2023

கனடா அனுப்புவதாக 6 பேரிடம் மோசடி செய்தவர் கைது!

www.pungudutivuswiss.com


கனடா அனுப்புவதாக கூறி வவுனியாவில் 6 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை வவுனியா பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.

கனடா அனுப்புவதாக கூறி வவுனியாவில் 6 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை வவுனியா பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்

வவுனியாவின் பட்டக்காடு, திருநாவற்குளம், தவசிகுளம், மல்லாவி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 நபர்களிடம் கனடா அனுப்புவதாக கூறி யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பணம் பெற்றுள்ளார்.

ஒருவரிடம் இருந்து 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் 6 பேரிடம் பணம் பெற்றுள்ளதுடன், பிறிதொருவரிடம் 3 பவுண் சங்கிலி ஒன்றையும் பெற்றுள்ளார். எனினும் கனடா அனுப்பாது மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட நபர்கள் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தனர்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா தலமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரத்நாயக்கா தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 41 வயது நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ad

ad