புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2023

வெற்றிகரமாக வெளியேறிய உக்ரைனின் 3 தானிய கப்பல்கள்!

www.pungudutivuswiss.com

உக்ரைனிய துறைமுகத்தில் இருந்து 3 தானிய சரக்கு கப்பல்கள் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்ய போர் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் உக்ரைனிய தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகி கொண்டது.

உக்ரைனிய துறைமுகத்தில் இருந்து 3 தானிய சரக்கு கப்பல்கள் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்ய போர் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் உக்ரைனிய தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகி கொண்டது.

இதனால் உலகின் முன்னணி தானிய உற்பத்தியாளரான உக்ரைனில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு செல்ல வேண்டிய தானியங்கள் தடைப்பட்டது.

ரஷ்யாவின் இந்த செயலை கண்டித்த மேற்கத்திய நாடுகள், ரஷ்யா உலக உணவு விநியோகத்தை வைத்து பேரம் பேசுவதாக குற்றம்சாட்டியது.

இந்நிலையில் உக்ரைனின் கருங்கடல் துறைமுகத்தில் இருந்து 3 சரக்கு கப்பல்கள் வெளியேறியுள்ளது என கடல்சார் போக்குவரத்து தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

ரஷ்யாவின் விலகலை தொடர்ந்து உக்ரைன் தற்காலிகமாக உருவாக்கிய மனிதாபிமான வழித்தடம் வழியாக இந்த சரக்கு கப்பல் போக்குவரத்து முன்நகர்த்தப்பட்டுள்ளது.

ஏஜாரா, யிங் ஹா ஓ 01, இன்னேய்டா என பெயரிடப்பட்ட 3 சரக்கு கப்பல்களில் 1,27,000 மெட்ரிக் டன் உணவு தானியங்கள் மற்றும் இரும்பு தாதுக்களை சீனா, ஸ்பெயின், எகிப்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் ஓல்கா, ஐடா, ஃபோர்ஸா டோரியா மற்றும் நியூ லெகஸி ஆகிய நான்கு புதிய சரக்கு கப்பல்கள் உக்ரைனிய நீரில் நுழைந்து இருப்பதாகவும், அவை உக்ரைனின் கருங்கடல் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டு இருப்பதாகவும் கடல்சார் போக்குவரத்து தரவுகள் தெரிவித்துள்ளன.

ad

ad