புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2023

மண்டபம் அகதி முகாமில் தடுத்து நிறுத்தப்பட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

www.pungudutivuswiss.com
இந்தியாவின் - தமிழ்நாட்டில் அமைந்துள்ள இராமநாதபுரம் - மண்டபம் அகதி முகாமிற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் சென்ற போது அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

மண்டபம் அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை கடந்த வியாழக்கிழமை(26.09.2023) அன்று சந்திக்க சென்றிருந்த போதே அங்குள்ள அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக மேலும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் அகதிகளை சந்திப்பதற்கான வேண்டுகோள் தாயகத்தில் இருந்து விடுக்கப்பட்ட நிலையில் அவர் இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் வெளியிட்ட பரபரப்பு தகவல்(Video)
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் வெளியிட்ட பரபரப்பு தகவல்(Video)
அகதிகளை சந்திப்பதற்கான முயற்சி
மேலும், அகதிமுகாமில் உள்ள அதிகாரிகள் தடுத்து நிறுத்தியமையால் ஈழத்தமிழ் அகதிகளை சந்திப்பதற்கான முயற்சி முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மண்டபம் அகதி முகாமில் தடுத்து நிறுத்தப்பட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | Charles Nirmalanathan Mandapam Refugee Camp

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான எந்த தகவலையும், தமிழக அரசு இதுவரையில் வெளியிடவில்லை.

எனினும் அங்குள்ள நடைமுறைகளை பின்பற்றி சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினரை தடுத்து நிறுத்திய விடயமானது, ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியையும், விசனத்தையும் உண்டாநீதிபதி இராஜினாமா : பிரதம நீதியரசரை சந்திக்கின்றது சட்டத்தரணிகள் சங்கம்

ad

ad