புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2023

வாய்க்காலுக்குள் விழுந்த உழவு இயந்திரம்! - 3 பிள்ளைகளின் தந்தை பலி! [Monday 2023-10-02 06:00]

www.pungudutivuswiss.com


திருகோணமலை - தங்கநகர் கிராமத்தில் உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை - தங்கநகர் கிராமத்தில் உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றுக் காலை 11.30 மணியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவத்தில் மூதூர் - பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் சுந்தரவதனன் (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

உழவு வேலைக்காக பாரதிபுரம் பகுதியில் இருந்து கிளிவெட்டி - தங்கநகர் நோக்கிச் சென்றபோது தங்கநகர் பகுதியில் உழவு இயந்திரம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வாய்காலினுள் விழுந்ததால் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்த மூன்று பிள்ளையின் தந்தையான குறித்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இதன் போது அருகில் இருந்த நபர் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad