புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 அக்., 2023

சரணடைந்தவர்களின் பட்டியலை ஒப்படைக்குமாறு 58 ஆவது படைப்பிரிவுக்குக் கட்டளையிடுமாறு கோரிக்கை! [Friday 2023-10-27 17:00]

www.pungudutivuswiss.com


ஆட்கொணர்வு மனு வழக்கில் சட்டத்தரணிகளால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதைப் போன்று 2009 மே மாதம் 18 ஆம் திகதி சரணடைந்தவர்களின் பட்டியலை ஒப்படைக்குமாறு 58 ஆவது படைப்பிரிவுக்குக் கட்டளையிடல் உள்ளடங்கலாக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் தாம் சிரத்தையுடன் செயற்படுவதை நிரூபிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தியுள்ளது.

ஆட்கொணர்வு மனு வழக்கில் சட்டத்தரணிகளால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதைப் போன்று 2009 மே மாதம் 18 ஆம் திகதி சரணடைந்தவர்களின் பட்டியலை ஒப்படைக்குமாறு 58 ஆவது படைப்பிரிவுக்குக் கட்டளையிடல் உள்ளடங்கலாக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் தாம் சிரத்தையுடன் செயற்படுவதை நிரூபிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து யஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

காணாமல்போனோரின் குடும்பத்தினர் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்காக பல வருடகாலமாக காத்திருக்கின்றனர். எனவே, காணாமல்போனோர் தொடர்பில் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் இலங்கை அரசாங்கம் சிரத்தையுடன் செயற்படுகின்றது என்பதை உறுதிப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இலங்கையில் காணாமல்போனோரின் குடும்பத்தினர், குறிப்பாக தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து 33 ஆவது ஆண்டாக இன்றையதினம் தமது உறவுகளை நினைவுகூரவிருப்பதுடன், அவர்களுக்கான நீதியை நிலைநாட்டுமாறும் வலியுறுத்தவுள்ளனர். உண்மைக்கான அவர்களது நீண்டகாலத் தேடல், பல வருடங்களாகத் தொடர் கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்மக்களின் நிலையையும் பிரதிபலிக்கின்றது.

அரசாங்கமானது சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்துவதற்காக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தை உரியவாறு கையாள்வதாகப் பாசாங்கு செய்துகொண்டு, மறுபுறம் காணாமல்போனோரின் பெற்றோர் உயிரிழக்கும்வரை அவர்களை உண்மைக்காகக் காத்திருக்கச்செய்யக்கூடாது.

இதுவரையான காலப்பகுதியில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் பெற்றோர்கள் 125 பேர் அவர்களது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறிந்துகொள்ளாமலே உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. அதுமாத்திரமன்றி வட, கிழக்கு மாகாணங்களில் நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்போர் மற்றும் நினைவேந்தல்களில் கலந்துகொள்வோரைக் கண்காணிக்கின்ற மற்றும் அவர்கள்மீது அடக்குமுறைகளைப் பிரயோகிக்கின்ற நடவடிக்கைகளும் தொடர்கின்றன.

இவ்விடயத்தைப் பொறுத்தமட்டில் சர்வதேச நியமங்கள் மற்றும் உள்நாட்டில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் பிரகாரம் உண்மையைத் தெரிந்துகொள்வதற்கான தார்மீக உரிமை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உண்டு. இருப்பினும் இதுகுறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கென இலங்கை அரசாங்கத்தினால் புதிதாக நியமிக்கப்படும் பல்வேறு ஆணைக்குழுக்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியையோ அல்லது ஆறுதலையோ தரமாட்டாது.

இவ்வாறானதொரு பின்னணியில் மாத்தளை மனிதப்புதைகுழி தொடர்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர்களால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்துக்கு இலங்கை அரசாங்கம் உடனடியாகப் பதிலளிக்கவேண்டும். அதேபோன்று 1987 - 1990 வரையான காலப்பகுதியில் பணியாற்றிய சகல மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பாளர்களின் பெயர் விபரங்களை வெளியிடவேண்டும். அதேவேளை இக்காலப்பகுதியில் வலிந்து காணாமலாக்கல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் எதிராகப் பரிந்துரைக்கப்பட்ட நீதிமன்ற வழக்குகளின் முன்னேற்றம் குறித்து பாராளுமன்றத்துக்குத் தெரியப்படுத்தவேண்டும்.

மேலும், ஆட்கொணர்வு மனு வழக்கில் சட்டத்தரணிகளால் வேண்டுகோள்விடுக்கப்பட்டதைப்போன்று 2009 மே மாதம் 18 ஆம் திகதி சரணடைந்தவர்களின் பட்டியலை ஒப்படைக்குமாறு 58 ஆவது படைப்பிரிவுக்குக் கட்டளையிடவேண்டும். இராணுவத்தின் 58 ஆம், 59 ஆம் மற்றும் 53 ஆம் படைப்பிரிவுகளின் கட்டளைத்தளபதிகள் மற்றும் துணைத்தளபதிகள் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும் என்று சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தியுள்ளது.

ad

ad