புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 அக்., 2023

அம்பிட்டிய சுமண தேரரை உடனடியாக கைது செய்யுமாறு சிஐடியில் முறைப்பாடு!

www.pungudutivuswiss.comஅம்பிட்டிய சுமண தேரரை உடனடியாக கைதுசெய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை கையளித்துள்ள வடக்கு, கிழக்கு மக்கள் போராட்டத்துக்கான ஆதரவு இயக்கத்தின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந் தமிழ் மக்களை வெட்டிக் கொலை செய்யப்போவதாக தேரர் மிரட்டியமைக்கான வீடியோ ஆதாரத்தையும் கையளித்துள்ளார்.

அம்பிட்டிய சுமண தேரரை உடனடியாக கைதுசெய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை கையளித்துள்ள வடக்கு, கிழக்கு மக்கள் போராட்டத்துக்கான ஆதரவு இயக்கத்தின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந் தமிழ் மக்களை வெட்டிக் கொலை செய்யப்போவதாக தேரர் மிரட்டியமைக்கான வீடியோ ஆதாரத்தையும் கையளித்துள்ளார்

குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கான கடிதத்தில் ராஜ்குமார் ராஜீவ்காந் தெரிவித்துள்ளதாவது :

அம்பிட்டிய சுமண தேரர் எனும் மட்டக்களப்பில் வசிக்கும் நபர் ஒருவரின் நடவடிக்கைகள் குறித்து நான் உங்களின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகின்றேன்.

இந்த நபர் தொடர்ச்சியாக இனவெறிப் போக்கினை மனோநிலையை வெளிப்படுத்தி வருகிறார். மேலும், அவர் சமூகங்கள் மத்தியில் மோதலை தூண்டும் விதத்தில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றார்.

அவர் பல தடவைகள் பொலிஸாருக்கு எதிராக வன்முறையான விதத்தில் நடந்துகொண்டுள்ள போதிலும் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நேற்று அவர் பொலிஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். அவ்வேளை கொழும்பில் உள்ள தமிழர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவேன் என பகிரங்கமாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இது அச்சம் ஏற்படுத்தும் நடவடிக்கை. கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் வாழும் தமிழர்களின் பாதுகாப்புக்கான நேரடி அச்சுறுத்தல்.

அம்பிட்டிய சுமண தேரருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கின்றேன். அவரது கோபத்தை தூண்டுகின்ற பேச்சுக்களுக்காகவும் வன்முறையை தூண்டுகின்ற விதத்திலான செயற்பாடுகளுக்காகவும் அவரை கைதுசெய்வது அவசியம்.

இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டின் பல்வேறுபட்ட சமூகத்தினர் மத்தியில் ஐக்கியம், சமாதானம் என்பவற்றுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். அதனை சகித்துக்கொள்ளக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்

ad

ad