புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2023

சிவகார்த்திகேயன் எனக்கும் என்ன உறவு..? – இமான் முதல் மனைவி மோனிகா கொடுத்த அதிர்ச்சி பதில்

www.pungudutivuswiss.com
சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக நடிகர் இசையமைப்பாளர் டி இமானின் முதல் மனைவி மோனிகா தன்னுடைய கருத்தை அதிரடியாக பதிவு செய்திருக்கிறார்.
அவர் கூறியதாவது, சிவகார்த்திகேயன் ரொம்ப பாவம்.. மிகவும் டீசன்டான மனிதர்.. இமானுக்கு இப்போ பட வாய்ப்புகள் இல்லை என்று இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்.
விவாகரத்துக்கு பிறகு 30 பேருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு முன்னேறி என் மகள்களோடு சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் டி. இமானின் முதல் மனைவி மோனிகா.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார். அதனால் இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பணியாற்றுவது கடினம் என்றும் அதற்கு உண்டான காரணத்தை கூறினால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் நான் அதனை சொல்லாமல் இருக்கிறேன் என அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தார் டி இமான்.
இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கும் நிலையில் தன்னுடைய முதல் மனைவி மோனிகாவை கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் டி இமான்.
அதன் பிறகு அமலி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அப்போதே எதற்காக இவ்வளவு விரைவாக இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கேள்வியை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் விவாதித்து வந்தனர்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று டி இமான் குற்றம் சாட்டியிருப்பதை தொடர்ந்து இமானின் விவாகரத்திற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என சமூகவலைகளில் பலரும் தங்களுடைய விமர்சனங்களை எழுதி வருகின்றனர்.
ஆனால், பாதி வெந்த சாப்பாட்டை சாப்பிடுவது போல் தான் ஒரு தரப்பு வாதத்தை மட்டும் கேட்டுக் கொண்டு ஒரு தனி நபரை பற்றிய விமர்சனங்களை முன்வைப்பது என ரசிகர்கள் சிலர் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் கருத்து என்ன..? என்று தெரிந்த பிறகுதான் இந்த விவகாரத்தில் முழு விவரம் நமக்கு தெரிய வரும் அதுவரை யாரையும் தவறாக பேசாமல் இருப்பது தான் சிறந்தது என்று சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக இருக்கும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருக்கின்றனர்.
இதையும் படிங்க :
நயன்தாரா-வுக்கு மட்டும் தான் தொடை இருக்கா.. எனக்கு இல்லையா..? - பீஸ்ட் மோடில் காஜல் அகர்வால்..!
இந்நிலையில், இசையமைப்பாளர் டி இமானின் முதல் மனைவி மோனிகா சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக தன்னுடைய குரலை கொடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது, சிவகார்த்திகேயன் எங்களுடைய குடும்ப நண்பர். ரொம்ப டீசன்டான மனிதர்., இமானுக்கும் அவருக்கும் நல்ல நட்பு இருக்கிறது. நண்பர் என்ற அடிப்படையில் எங்கள் குடும்பத்தின் மேல் மிகவும் அக்கறையாக இருப்பார்.
என் மகள்களுக்கும் அவரை பிடிக்கும். அதனால் தான் எங்களுக்குள் விவாகரத்து நடக்கக்கூடாது என்று சமாதானம் பேசி பஞ்சாயத்து பண்ணி வைக்க வந்தார்.
ஒரு குடும்பம் சிதற சிதற விடக்கூடாது என்பதற்காக என்ற நல்லெண்ணத்தில் நாங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று நினைத்து சமாதான முயற்சிகளை மேற்கொண்டார்.
ஈமானின் விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் சப்போர்ட் செய்யவில்லை. நியாயத்தின் பக்கம் நின்றார். இது இமானுக்கு பிடிக்கவில்லை. சிவகார்த்திகேயன் தனக்கு சப்போர்ட் செய்யவில்லை என்பதை தான் டி இமான் துரோகம் என்று சொல்கிறார் போல் தெரிகிறது.
ஆனால், அதை வெளியில் எனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் தொடர்பு இருக்கிறது என்பது போல வேறு மாதிரி புரிந்து கொள்கிறார்கள்.. பொதுவாக குடும்ப நண்பர்கள் என இருந்தால் நண்பர்களோட குடும்பம் பிரியக்கூடாது என்று தான் நினைப்பார்கள். இதில் சிவகார்த்திகேயன் மீது என்ன தப்பு இருக்கிறது..?
ஒரு வருடத்திற்கு முன்பு முன்னாடி வந்த பெண்ணையெல்லாம் ரெடியா பார்த்து வச்சிட்டு தான் எனக்கு விவாகரத்து கொடுத்திருக்கிறார் இமான். நான் முடியாது என்று சொன்ன பிறகும் அரசியல்வாதிகளை வைத்து உங்கள் அப்பாவை கொன்னுடுவோம் என்று மிரட்டல் எல்லாம் விடுத்து 46 நாட்களில் விவாகரத்தும் வாங்கினார்.
எனக்கு எந்த ஜீவனாசமும் கொடுக்கவில்லை. காசு வேணுமா..? பிள்ளைகள் வேணுமா..? என்று கேட்டால் எனக்கு பிள்ளை தான் வேணும் என்று ஜீவனாம்சம் ஒரு பைசா கூட வாங்காமல் வந்தேன்.
அந்த வாழ்க்கையில் இருந்து ஒன்றுமே இல்லாமல் வெளியே வந்து விட்டேன். இப்போது, எனக்கு ஒரு கம்பெனி இருக்கிறது 30 பேருக்கு சம்பளம் கொடுத்து சுயமாக முன்னேறி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

ad

ad