யாழ்ப்பாண மத்திய பேரூந்து நிலையம், யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதி,ஸ்ரான்லி வீதி, ஆஸ்பத்திரி வீதி, முனிஸ்வரா வீதி, கே.கே.எஸ் வீதி ஆகியவற்றில் கடைத்தொகுதிகள் மூடப்பட்டு காட்சியளித்தன. வெறிச்சோடிய நிலையில் யாழ்ப்பாணம் மத்திய நகரப்பகுதி காணப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளது. அரச நிறுவனங்கள் அனைத்தும் திறந்துள்ளன. தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை. நெல்லியடி, பருத்தித்துறை, சாவகச்சேரி, கொடிகாமம், நகரங்களும் இயல்பு நிலையை இழந்திருந்தன. |