புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2023

தென் ஆபிரிக்காவை மிரட்டிப் பார்த்த இலங்கை…!

www.pungudutivuswiss.com

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் உலகக்கிண்ண போட்டியில் தென்னாபிரிக்க அணி 102 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தென்னாப்பிரிக்க அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களம் இறங்கிய தென்னாபிரிக்க அணியின் முதல் விக்கெட்டாக அணித்தலைவர் டெம்பா பௌவுமாவை 8 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்தார் டில்ஷான் மதுசங்க.

ஆனால், குயின்டன் டி காக்குடன் இணைந்து களமிறங்கிய ரஸ்ஸி வாண்டர் டுசன், இலங்கை பந்துவீச்சாளர்களை கடுமையாகத் தாக்கி இரண்டாவது விக்கெட்டுக்கு 204 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார்.

ரஸ்ஸி வான் டியூசன் 108 ஓட்டங்கள், எய்டன் மார்க்ரம் 54 பந்துகளில் 106 ஓட்டங்களஐம் எடுத்தனர். ஐடன் மார்க்ரம் 49 பந்துகளில் சதம் அடித்ததே உலகக் கோப்பையில் அதிவேக சதமாக பதிவானது.

அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 428 ஓட்டங்களைப் பெற்ற தென்னாபிரிக்கா தனது இன்னிங்ஸை நிறைவு செய்தது.

 

அந்த எண்ணிக்கையானது உலகக் கோப்பை போட்டியில் ஒரு அணி பெற்ற அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். 429 ஓட்டங்கள் என்ற மாபெரும் இலக்கை துரத்திய இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக பதும் நிஸ்ஸங்க ஆட்டமிழந்தார்.

குசல் ஜனித்துடன் களமிறங்கிய குசல் மெண்டிஸ், வேகமான இன்னிங்ஸை விளையாடி தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களுக்கு வலுவான தாக்குதலைத் தொடுத்தார். குசல் மெண்டிஸ் 42 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 8 சிக்ஸர்களுடன் 76 ஓட்டங்கள் எடுத்தார்.

குசல் மெண்டிஸ் அடித்த 8 சிக்ஸர்கள், உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கை வீரர் ஒருவர் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற சாதனையாக அமைந்தது. குசால் ஆட்டமிழந்த பிறகு, இலங்கை அணிக்கு நம்பிக்கை சேர்த்த சரித் சசங்க 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 75 ஓட்டங்கள் குவித்தார்.

இறுதியில் ஒட்டுமொத்தமாக 326 ஓட்டங்களை பெற்று அனைத்து விக்கட்டுகளையும் பறி கொடுத்தது இலங்கை, ஆசிய கிண்ண இறுதி போட்டியில் 50 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த இலங்கை, உலக கிண்ணத்தின் ஆரம்ப ஆட்டத்தில் மிகச் சிறப்பாக 326 ஓட்டங்களை குவித்துள்ளமை இலங்கை ரசிகர்களுக்கு பலத்த நம்பிக்கையை தோற்றுவித்திருக்கிறது எனலாம்

ad

ad