புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2023

கொழும்பில் 7 இடங்களில் குண்டுவெடிக்குமா? - ஐஎஸ் அச்சுறுத்தல் குறித்து சஜித் கேள்வி.

www.pungudutivuswiss.com

கொழும்பில் விரைவில் வெடிகுண்டுத் தாக்குதல்கள் இடம்பெறும் என ISIS அச்சுறுத்தல் விடுத்துள்ளமை தொடர்பில்,  ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்தி தொடர்பில் அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுச் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவ்வாறான அழிவுகள் ஏற்படாதவாறு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

"பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பொது பாதுகாப்புத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்து, சபையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,'' என வலியுறுத்தினார்.

கொழும்பு நகரின் 7 இடங்களை இலக்கு வைத்து ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடாத்த திட்டமிட்டுள்ளமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பு பயங்கரவாத விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க முன்னிலையில் பயங்கரவாத விசாரணை பிரிவு இந்த விடயத்தை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதன்படி, பாராளுமன்றம், கொழும்பு துறைமுக நகரம், கங்காராமை உள்ளிட்ட 7 இடங்களை ஐ.எஸ் பயங்கரவாதிகள் இலக்கு வைத்துள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பயங்கரவாத விசாரணை பிரிவு, குறித்த கைதியிடம் வாக்குமூலமொன்றை பதிவு செய்வதற்கான அனுமதியை நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த நீதவான், இந்த கோரிக்கையுடன் தொடர்புப்படும் நீதிமன்றத்தில் குறித்த கோரிக்கையை விடுக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ad

ad