புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 அக்., 2023

இஸ்ரேலுக்குள் எப்படி நுழைந்தோம்? - ஹமாஸ் அமைப்பினர் விளக்கம்!

www.pungudutivuswiss.com

இஸ்ரேல் நாட்டு ராணுவத்தை தாண்டி எவ்வாறு ஹமாஸ் படைகள் இஸ்ரேல் நாட்டிற்கு நுழைந்தது என்ற வீடியோவை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். இன்று அதிகாலை பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் Al-Aqsa Flood ஆபரேஷன் என்ற பெயரில் இஸ்ரேல் மீது  கிட்டத்தட்ட 5000 ஏவுகணைகளை வெறும் 20 நிமிடங்களில் ஏவி தாக்குதல் நடத்தினர். மேலும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர்.

இஸ்ரேல் நாட்டு ராணுவத்தை தாண்டி எவ்வாறு ஹமாஸ் படைகள் இஸ்ரேல் நாட்டிற்கு நுழைந்தது என்ற வீடியோவை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். இன்று அதிகாலை பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் Al-Aqsa Flood ஆபரேஷன் என்ற பெயரில் இஸ்ரேல் மீது கிட்டத்தட்ட 5000 ஏவுகணைகளை வெறும் 20 நிமிடங்களில் ஏவி தாக்குதல் நடத்தினர். மேலும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர்

இஸ்ரேலிய பகுதிக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் பெண் ராணுவ வீரர்கள் மற்றும் இஸ்ரேலிய மக்களை காசா பகுதிக்கு பிணைக் கைதிகளாக கடத்தி சென்றுள்ளனர்.

இதற்கிடையில் இரண்டாவது முறையாக மீண்டும் 150 ராக்கெட்டுகளை இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது ஹமாஸ் அமைப்பினர் ஏவினர்.

இந்நிலையில் ஹாமஸ் அமைப்பினர் முதலில் எவ்வாறு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர் என்பது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அதைப்போல் ஹாமஸ் அமைப்பினர்கள் எவ்வாறு தடுப்புகளை தகர்த்தெறிந்து இஸ்ரேலுக்குள் நுழைந்தனர் என்ற வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

இது சர்வதேச சமூகங்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து ஹமாஸ் படைகளை அழிக்க இஸ்ரேல் ராணுவம் தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தும் என இஸ்ரேல் நாட்டின் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

அத்துடன் காசா பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறும், இந்த கருப்பு நாளுக்கு பழிவாங்கும் விதமாக காசா நகரம் இடிபாடுகளின் நகரமாக மாற்றப்படும் எனவும் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ad

ad