புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 அக்., 2023

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்: இரு தரப்பிலும் 600 பேர் பலி, 2,000 பேர் காயம் - என்ன நடக்கிறது

www.pungudutivuswiss.com
இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் இதுவரை 230 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

7 அக்டோபர் 2023
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்
இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் விமானப்படைகள் காசா மீது குண்டுமழை பொழிகின்றன.

இந்த பதில் தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இஸ்ரேல், ஹமாஸ் குழுவினரின் மறைவிடங்களையே குறிவைத்து தாக்கி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

காஸா முழுவதும் உள்ள ஏழு வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நகர மையங்களுக்குச் செல்லுமாறு அல்லது தங்குமிடங்களில் தஞ்சம் அடையுமாறு இஸ்ரேலிய இராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது.

விளம்பரம்

பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஐ.நா நடத்தும் பள்ளிகளில் தஞ்சம் புகுந்ததாக அங்கிருப்பவர்கள் பிபிசியிடம் கூறியுள்ளனர்.

இஸ்ரேலிய படைகளுக்கும் நூற்றுக்கணக்கான ஹமாஸ் ஆய்ஹதக்குழுவினரும் இடையே குறைந்தது 22 இஸ்ரேல் இடங்களில் துப்பாக்கிச் சண்டைகள் நடந்துள்ளன.

யோம் கிப்பூர் போருக்குப் பிறகு இஸ்ரேலில் நடந்த வன்முறையிலேயே மிக மோசமான வன்முறையை நிகழ்த்தி, பணயக் கைதிகள் எல்லையைத் தாண்டி காசாவிற்குள் கொண்டு செல்லப்பட்டனர்.

ஹமாஸின் தரை, வான் மற்றும் கடல் தாக்குதலைத் தொடர்ந்து குறைந்தது 300 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1,000க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர். அதோடு கூடுதலாக 3,000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் இஸ்ரேலிய எல்லைக்குள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

பதிலடி தாக்குதல்களுடன் இஸ்ரேல் பதிலடி கொடுத்ததில் 230க்கும் மேற்பட்ட காசா மக்களும் கொல்லப்பட்டதாக காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாலத்தீவு: சீன ஆதரவு முகமது முய்சுவால் அங்குள்ள தமிழர்களுக்கு பிரச்னை ஏற்படுமா?
8 அக்டோபர் 2023
ஹமாஸ்: இஸ்ரேல் உளவுத்துறையை ஏமாற்றி தாக்குதல் நடத்திய அமைப்பின் முழு பின்னணி
52 நிமிடங்களுக்கு முன்னர்
காசாபட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
காசாவில் உள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர்

குறைந்தது 300 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர் - துருக்கியில் உள்ள தூதரகம்
இதுவரை குறைந்தது 300 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 12க்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்று துருக்கியிலுள்ள இஸ்ரேலிய தூதரகம் இஸ்ரேலின் சுகாதார அமைச்சகத்தை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 2,000 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 19 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த எண்ணிக்கை இஸ்ரேலால் நேரடியாக உறுதிப்படுத்தப்படவில்லை.

காசாவில் 313 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாலஸ்தீன சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, சனிக்கிழமை முதல் இஸ்ரேலிய பதில் வான்வழித் தாக்குதல்களால் காஸாவில் 313 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; கிட்டத்தட்ட 2,000 பேர் காயமடைந்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் பலி; பலர் கைது - இஸ்ரேல்
காசாவில் இருந்து நடந்த தக்குதலுக்கு பிறகு, பாலஸ்தீனிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி, இஸ்ரேலிய சமூகங்களைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன அறிக்கையின்படி, நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தர்கள் தற்போது கொல்லப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

இதுவரை எட்டு இடங்களில் தீவிரவாதிகளுடன் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

இஸ்ரேல்: காசா தாக்குதலை தடுக்கத் தவறிய மொசாட் - உளவுத்துறை கூறும் விளக்கம்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
மாலத்தீவு: சீனாவுடன் நெருக்கம், இந்தியாவை வெளியேற்ற துடிக்கும் அதிபர் முகமது முய்சு
6 அக்டோபர் 2023
இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் தாக்குதல்
இஸ்ரேல் vs ஹமாஸ் பட மூலாதாரம்,REUTERS
படக்குறிப்பு,
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்பட அந்நாட்டின் முக்கிய பகுதிகள் மீது ஹமாஸ் அமைப்பு ராக்கெட்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது

இஸ்ரேல் - பாலத்தீனம் இடையே நூறாண்டுகளுக்கும் மேலாக பிரச்னை நீடித்து வருகிறது. இதனால், அங்கே குண்டுவெடிப்புகளும், துப்பாக்கிச் சூடுகளும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

எனினும், 2021-ம் ஆண்டு இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான 11 நாள் போருக்குப் பிறகு ஒப்பீட்டளவில் பெரிய அளவில் அங்கே மோதல்கள் நடக்கவில்லை. அதற்கு ஹமாஸ் அமைப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்பட அந்நாட்டின் முக்கிய பகுதிகள் மீது ஹமாஸ் அமைப்பு ராக்கெட்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.

இருபதே நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலின் பல கட்டடங்கள் தீப்பிடித்து எரிகின்றன. இதில், 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 740 பேர் காயமடைந்திருப்பதாகவும் இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.

ad

ad