புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 நவ., 2023

காசாவில் உடன் போர் நிறுத்தம் அமுல்படுத்த வேண்டுமென கோரிக்கை

www.pungudutivuswiss.com

காசாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டு

மென ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டனியோ குற்றாரஸ் தெரிவித்துள்ளார்.

காசா பிராந்தியத்தில் நிலைமைகள் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து செல்வதகா அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

போர் காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய மனிதாபிமான அவலத்தை வரையறுப்பதற்கு போர் நிறுத்தம் மிக இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காசாவில் பொதுமக்கள் கொல்லப்படுவதனை வன்மையாக கண்டிப்பதாக குற்றாரஸ் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பெண்களும் குழந்தைகளும் என்பது அதிர்ச்சியையும் வலியையும் தருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து தரப்பினரும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மதித்துச் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

ad

ad