புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 நவ., 2023

திருகோணமலை விமான தளத்தில் தரை இறங்கிய இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

www.pungudutivuswiss.com
கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணத்திற்கு இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் சென்றுள்ளார்.
திருகோணமலை விமான தளத்தில் இன்று(01.11.2023) நிர்மலா சீதா ராமனை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பிரதம செயலாளர் R.M.P.S ரத்நாயக்க,ஆளுநர் செயலாளர் L.P மதநாயக்க, ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் L.L அணில் விஜயஶ்ரீ, அரச அதிபர் மற்றும் சுற்றுலா பணியக தவிசாளர் மதன் ஆகியோர் வரவேற்றனர்.
மேலும் ஆளுநரின் ஏற்பாட்டில் நிர்மலா சீதா ராமன் நாளை திருக்கோணேச்சரம் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்வதுடன், மேலும் பல முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்க உள்ளார் என கூறப்படுகிறது.

ad

ad