புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 நவ., 2023

தமிழர்களிடம் பொது மன்னிப்புக் கோரினார் அம்பிட்டிய தேரர்

www.pungudutivuswiss.com

தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் என பொது வெளியில் எச்சரிக்கை விடுத்திருந்த மட்டக்களப்பு - மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர்  தனது கருத்துக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

தான் மிகுந்த மன வேதனையில் இருந்தததாகவும், இதன் காரணமாக இவ்வாறு பேசியதாகவும் அவர் தமிழர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும், ஊடகவியலாளர்கள் சிலர் என்னை வம்புக்கு இழுப்பதை போல் செயற்பட்டனர். என்னை கோபத்திற்கு உட்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அப்போது தான் நான் சில கருத்துக்களை கூறினேன் என்றும் அந்த கருத்துக்களை பிரதானமாக வைத்து சில தமிழ் கட்சிகள் தமிழ் மக்களை குழப்பும் வகையில் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ad

ad