புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2023

பாலத்தீனம்: மேற்கு உலகை மிரட்ட அரபு நாடுகள் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தினால் என்ன ஆகும்?

www.pungudutivuswiss.com
இஸ்ரேலுக்கு பயங்காட்ட அரபு நாடுகள் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தினால் என்ன ஆகும்?இஸ்ரேல் தினசரி மூன்று லட்சம் பீப்பாய்கள் எண்ணெய் வாங்குகிறது. இஸ்ரேலுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகளில் கஜகஸ்தான் மற்றும் அஜர்பைஜான் ஆகியவையும் அடங்கும்.

அரை நூற்றாண்டுக்கு முன்பு அரபு நாடுகள் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தன. இந்தப் போர் 'யோம் கிப்பூர் போர்' என வரலாற்றில் அறியப்படுகிறது. அந்தப் போரின் விளைவாக இஸ்ரேலில் புதிதாக உருவான யூத அரசை அமெரிக்கா ஆதரித்தது.

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க, அரபு நாடுகள் மேற்கத்திய நாடுகளுக்கு எண்ணெய் விநியோகத்தை நிறுத்தின.

இந்த முடிவு உலகப் பொருளாதாரத்திலும், எரிசக்திக் கொள்கையிலும், மத்திய கிழக்கின் அதிகாரச் சமநிலையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் நடந்து சரியாக 50 ஆண்டுகளுக்குப் பிறகுதான், தற்போது இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நடந்து வருகிறது.

விளம்பரம்

இஸ்ரேலுடன் அமெரிக்கா துணை நிற்கும் சூழலில், காஸா மீது இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதலைத் தொடுத்து வருகிறது.

இஸ்லாமின் இரு பிரிவுகளால் மத்திய கிழக்கில் ஏற்படும் தாக்கம்
24 நவம்பர் 2023
வைரலாகும் 'காவி காதல் வலை' - பிபிசி ஆய்வில் தெரிய வந்த அதிர்ச்சித் தகவல்கள்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
இஸ்ரேல் - ஹமாஸ் போர்: எண்ணெய் தடை அரபு நாடுகள்பட மூலாதாரம்,GETTY IMAGES
இஸ்ரேலின் செயலால் அரபு நாடுகள் கோபத்தில் உள்ளன. இவ்வாறான நிலையில் போரை முடிவுக்குக் கொண்டு வரவோ அல்லது இஸ்ரேலை பணிய வைக்கவோ, அரபு நாடுகள் மேற்கத்திய நாடுகளுக்கு எண்ணெய் விநியோகத்தைத் தடை செய்து அழுத்தம் கொடுக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அரபு நாடுகள் மேற்குலக நாடுகளுக்கு எதிராக எண்ணெய் ஆயுதத்தைப் கையில் எடுப்பார்களா? இதற்கு முன்பு அரபு நாடுகள் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியபோது அது உலகப் பொருளாதாரத்தில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது? இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

எண்ணெய் விநியோகம் தடைபடுமா? சௌதி அரேபியா என்ன சொல்கிறது?
கொரோனா பேரிடர், சீனாவுடனான மேற்கத்திய நாடுகளின் வர்த்தகப் போர், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மற்றும் ஐரோப்பாவிற்கு எதிரான அதன் ஆக்கிரமிப்பு எரிவாயு கொள்கை ஆகியவை ஏற்படுத்திய பாதிப்புகளோடு உலகப் பொருளாதாரம் இன்னும் போராடி வருகிறது.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளமிக்க நாடுகள் எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதற்கும், 'நட்பற்ற நாடுகளுக்கு' விநியோகத்தை நிறுத்துவதற்கும் ஒப்புக் கொண்டால், அது உலகப் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடிக்கு வழிவகுக்கும்.

யோம் கிப்பூர் போரின்போது இருந்த சூழ்நிலைக்கும் மத்திய கிழக்கின் இன்றைய நிலைமைக்கும் இடையே சில ஒற்றுமைகள் உள்ளன. ஆனால் சில வேறுபாடுகளும் இல்லாமல் இல்லை என்கிறார் சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) தலைவரான ஃபத்தி பிரோல்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்: எண்ணெய் தடை அரபு நாடுகள்பட மூலாதாரம்,GETTY IMAGES
அவர் கூறுகையில், “உலகின் ஆற்றல் சந்தை எழுபதுகளில் இருந்து வியத்தகு முறையில் மாறிவிட்டது. அரபு நாடுகள் எண்ணெய் விநியோகத்தை நிறுத்த முடிவு செய்ததை அடுத்துதான் மேற்கத்திய நாடுகள் சர்வதேச எரிசக்தி முகமையை உருவாக்கின. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட உலகம் இதுபோன்ற சூழ்நிலைகளைச் சமாளிக்கத் தயாராக உள்ளது,” எனத் தெரிவித்தார்.

மேற்கத்திய நாடுகளுக்கான எண்ணெய் விநியோகத்தை நிறுத்துவது குறித்து இஸ்ரேலின் எதிர்ப்பாளர்களும், பாலத்தீன ஆதரவாளர்களும் இதுவரை அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.

ஆனால் நவம்பர் 7ஆம் தேதி, சௌதி அரேபியாவின் அமைச்சர் காலித் அல்-பாலிஹிடம், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு எண்ணெய்யை ஆயுதமாகப் பயன்படுத்த உங்கள் நாடு தயாரா என நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த, காலித் அல்-ஃபாலிஹ், "இன்று இந்த விருப்பத்தை நாங்கள் பரிசீலிக்கவில்லை. சௌதி அரேபியா அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் அமைதியை அடைய விரும்புகிறது," என்று புன்னகையுடன் பதிலளித்தார்.

அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளரை கொல்ல இந்தியா சதித் திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு
24 நவம்பர் 2023
காஸா போர் நிறுத்தம்: அமெரிக்காவால் முடியாததை கத்தார் சாதித்தது எப்படி?
24 நவம்பர் 2023
எண்ணெய் விநியோகத் தடைக்கு ஆதரவளிக்கும் இரான்
இஸ்ரேல் - ஹமாஸ் போர்: எண்ணெய் தடை அரபு நாடுகள்பட மூலாதாரம்,GETTY IMAGES
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரம் அடைந்த சூழலில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி செளதி அரேபியா தலைநகர் ரியாத்தில் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் அவசர மாநாடு நடைபெற்றது. இதில், எண்ணெய் விநியோகத்தை நிறுத்துவது குறித்துப் பெரிதாக விவாதிக்கப்படவில்லை.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது அழுத்தத்தை அதிகரிக்க சில நாடுகள் பல யோசனைகளை முன் வைத்தன. ஆனால் எரிசக்தி தடைகள் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

ஆனால் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எதிரியான இரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேலுக்கு எண்ணெய் விநியோகத்தைக் குறைக்க வேண்டும் என முன்மொழிந்தார். ஆனால் அதற்கு மற்ற நாடுகளின் ஆதரவு கிடைக்கவில்லை.

இஸ்ரேல் தினசரி மூன்று லட்சம் பீப்பாய்கள் எண்ணெய் வாங்குகிறது. இஸ்ரேலுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகளில் கஜகஸ்தான் மற்றும் அஜர்பைஜான் ஆகியவையும் அடங்கும்.

இரானின் முறையீட்டின் பேரில், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள், எண்ணெய் விநியோக விவகாரத்தில் அரசியல் செய்ய தோங்கள் விரும்பவில்லை என்று தெளிவுபடுத்தும் விதமாக அறிக்கையை வெளியிட்டன.

அரபு நாடுகளும் இரானும் 1950களில் இருந்து, சர்ச்சைக்குரிய பாலத்தீனப் பகுதியில் ராணுவ மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் வெடித்ததால், மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக எண்ணெயை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவது பற்றி விவாதித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராணி என அழைக்கப்பட்ட ரோமானியப் பேரரசர் : பிரிட்டன் அருங்காட்சியகம் தரும் தகவல்கள்
24 நவம்பர் 2023
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்: இருதரப்பு உடன்பாடு என்ன?
23 நவம்பர் 2023
எண்ணெய் தடை அரபு நாடுகளுக்கு பயன் தந்ததா?
இஸ்ரேல் - ஹமாஸ் போர்: எண்ணெய் தடை அரபு நாடுகள்பட மூலாதாரம்,GETTY IMAGES
மேற்குலக நாடுகளுக்கு அரபு நாடுகள் இரண்டு முறை எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியுள்ளன. முதலில் 1967இல் ஆறு நாள் போரின்போது விநியோகம் நிறுத்தப்பட்டது.

பின்னர், 1973இல் யோம் கிப்பூர் போரின்போது தடை விதிக்கப்பட்டது. முதல் தடை பலனளிக்கவில்லை, ஆனால் இரண்டாவது தடை ஆழமான விளைவுகளை ஏற்படுத்தியது.

மேற்கத்திய நாடுகளும் அரபு நாடுகளும் இந்தச் சம்பவங்களில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டன. எனவே, இப்போது யாரும் எண்ணெய் விநியோகத்தை நிறுத்துவது குறித்து உறுதியாகப் பேசுவதில்லை. யாரும் அவ்வாறு செய்யத் தற்போது விரும்பவில்லை.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் தன்னை யாரும் தாக்க மாட்டார்கள் என்று நினைத்தது. அதேபோல அரபு நாடுகள் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தாது என அமெரிக்கா கருதியது. ஆனால் இந்த இரண்டு நம்பிக்கைகளுமே தகர்ந்திருக்கின்றன.

யோம் கிப்புர் போரில் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பத்து நாட்களுக்குப் பிறகு, அரபு நாடுகள் அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் பல மேற்கத்திய நாடுகளுக்கு எண்ணெய் வழங்குவதை நிறுத்தின. இது மட்டுமின்றி பாரசீக வளைகுடாவின் ஷேக்கும் இரானின் ஷாவும் எண்ணெய் விலையை 70 சதவீதம் உயர்த்த ஒப்புக்கொண்டனர்.

ஒருபுறம், எண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில், மறுபுறம், அரபு நாடுகளின் எண்ணெய் உற்பத்திக் குறைப்பால், எண்ணெய் விலை ஐந்து மடங்கு அதிகரித்தது.

அந்தக் காலத்தில், உலகின் முக்கிய ஆற்றல் ஆதாரமாக எண்ணெய் திகழ்ந்தது. எண்ணெயின் விலை உயர்வால், உலகப் பொருளாதாரம் சிக்கலில் மாட்டிய

ad

ad