புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2023

மாவீரர் தினத்துக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதாக நீதிமன்றில் வாக்குறுதி!

www.pungudutivuswiss.com

வடக்கு கிழக்கில் இடம்பெறவுள்ள சட்டவிரோத “மாவீரர் தின நிகழ்வுகள்” தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பணியகத்தின் பணிப்பாளர் ஆகியோர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதிமொழி ஒன்றை வழங்கினர்.
இதன்போது, பொதுச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

வடக்கு கிழக்கில் இடம்பெறவுள்ள சட்டவிரோத “மாவீரர் தின நிகழ்வுகள்” தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பணியகத்தின் பணிப்பாளர் ஆகியோர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதிமொழி ஒன்றை வழங்கினர். இதன்போது, பொதுச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்

இம்மாதம் 27ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நடைபெறவுள்ள சட்டவிரோத மாவீரர் தின நிகழ்வுகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி இராணுவத்தின் ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரியினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ​​பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பணியகத்தின் பணிப்பாளர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்ரம இந்த உறுதிமொழியை வழங்கினார்

ad

ad