புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 நவ., 2023

கல்லறைகள் மேலிருந்து இராணுவமே வெளியேறு! - தேராவில் துயிலுமில்லம் முன் போராட்டம்.

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு -  தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி இன்று காலை 9.30 மணியளவில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள துயிலும் இல்லம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு - தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி இன்று காலை 9.30 மணியளவில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள துயிலும் இல்லம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியில் பாரிய பிரதேசத்தை இலங்கை இராணுவத்தின் 14 SLNG படைப்பிரிவு கையகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கு இடவசதி இன்றியும் தமது உறவுகளை புதைத்த இடத்தில் அஞ்சலி செலுத்த முடியாத நிலை உறவுகளுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மாவீரர் துயிலும் இல்லக் காணியில் இருந்து இராணுவத்தை வெளியேறுமாறு பல தடவைகள் அழுத்தம் கொடுத்தும் இதுவரை பயன்கிட்டவில்லை எனவும் தெரிவித்து குறித்த காணியில் உள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பார்க்கவிடு பார்க்கவிடு கல்லறையில் அப்பாக்களை பார்க்கவிடு, கல்லறைகளை வழிபட வழிவிடு, கல்லறைகள் மேலிருந்து இராணுவமே வெளியேறு, மிதிக்காதே மிதிக்காதே புனிதர்களை மிதிக்காதே, அழவிடு அழவிடு அம்மாக்களை அழவிடு, விளக்கேற்றுவோம் விளக்கேற்றுவோம் பிள்ளைகளுக்கு விளக்கேற்றுவோம், கல்லறைகளை அழிப்பதும் புத்தனின் போதனையா? போன்ற பல்வேறு வாசகங்களையுடைய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன், முன்னாள் கரைச்சி மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

   
   Bookmark and Share Seithy.com

ad

ad